2 கோடி கார்கள் விற்பனை! புதிய சாதனையை எட்டிய மாருதி சுசுகி
- News18
- Last Updated: December 1, 2019, 6:42 PM IST
கார் உற்பத்தி செய்துவரும் மாருதி சுசுகி நிறுவனம், இந்திய சந்தையில் 37 ஆண்டுகளில் 2 கோடி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் 1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ''மாருதி 800'' மாடலுடன் தனது விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. மாருதி நிறுவனம் ஒரு கோடி கார்களை விற்க 29 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் மேலும் 1 கோடி கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அனைத்து இந்திய குடும்பத்தினரும் சொந்த கார் வாங்கும் கனவு திட்டத்திற்காக மாருதி நிறுவனம் செயலாற்றி வருவதாக, இந்தியாவுக்கான மாருதி சுசுகி நிறுவன இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா தெரிவித்துள்ளார். Also see:
இந்தியாவில் 1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ''மாருதி 800'' மாடலுடன் தனது விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. மாருதி நிறுவனம் ஒரு கோடி கார்களை விற்க 29 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் மேலும் 1 கோடி கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அனைத்து இந்திய குடும்பத்தினரும் சொந்த கார் வாங்கும் கனவு திட்டத்திற்காக மாருதி நிறுவனம் செயலாற்றி வருவதாக, இந்தியாவுக்கான மாருதி சுசுகி நிறுவன இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா தெரிவித்துள்ளார்.