• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி சுசுகியின் ஸ்மார்ட் பைனான்ஸ் - ரூ.6,500 கோடி கடன் வழங்கல்

மாருதி சுசுகியின் ஸ்மார்ட் பைனான்ஸ் - ரூ.6,500 கோடி கடன் வழங்கல்

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

கடந்த 9 மாதங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு 6,500 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கடனாக வழங்கியுள்ளது.

  • Share this:
மாருதி சுசுகியின் ஸ்மார்ட் பைனான்ஸ் நிறுவனம், 9 மாதங்களுக்குள் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு 6,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

கார்களை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை இருந்தாலும், அதற்கான நிதி இருப்பதில்லை. இதனை தங்களுக்கான மார்க்கெட்டாக மாற்றியுள்ளது மாருதி சுசுகி நிறுவனம். கொரோனாவுக்குப் பிறகு பல சிறு குறு பைனான்ஸ் நிறுவனங்கள் முளைத்துள்ளன. அவை அனைத்தும் மக்களின் தேவையை அறிந்து குறைந்த வட்டியில் பணம் கொடுத்து வசூலித்து வருகின்றன. மாருதி சுசுகி நிறுவனமும், வாகனம் வாங்குபவர்களுக்காக பைனான்ஸைத் தொடங்கியுள்ளது. 9 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பைனான்ஸ் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 9 மாதங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு 6,500 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கடனாக வழங்கியுள்ளது.

கடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து மட்டுமே மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் கடன் கொடுக்கிறது. மல்டி பைனான்சிய=ர் மற்றும் என்டு டூ என்ட், ஆன்லைன் வழியாக கடன்களைக் கொடுக்கிறது. ப்ரீ அப்ரூவ்டு லோன்களையும் மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பெறுவோம் என நினைக்கவில்லை எனத் தெரிவித்தார். மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவித்த அவர், குறைவான வட்டியில், வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர்களை ஆராய்ந்து கடன் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

Also read... Datsun வழங்கும் நவம்பர் மாத தள்ளுபடி... redi-GO, GO மற்றும் GO+ மாடல்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவிப்பு!

கார் வாங்குபவர்கள் வெளியில் இருக்கும் பைனான்ஸில் பணம் வாங்குதற்கு பதிலாக மாருதி நிறுவனத்தின் ஸ்மார்ட் பைனான்ஸிலேயே கடன் வாங்கிக் கொள்ள முடியும். இது கார் வாங்குபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கிறது. கார் விற்பனைக்கு, வாங்குபவர்களின் அனுபவத்தையும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ள மாருதி சுசுகி நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பேசிய ஸ்ரீவஸ்தவா, " மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் அறிமுகத்துக்குப் பிறகு வாடிக்கையாளர்களிடையே கார் வாங்கும் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியை கண்கூடாக பார்க்க முடிந்தது. எங்கள் நிறுவனத்தின் தளத்தை இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர். தனியார் வங்கிகளான ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க், இண்ட்ஸ் பேங்க், பாங்க் ஆஃப் பரோடா மற்றும் டொயோட்டா ஃபைனான்சியல் சர்வீசஸ் (இந்தியா) உள்ளிட்ட 16 நிதி நிறுவனங்களுடன் எம்எஸ்ஐஎல் கூட்டு சேர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார். வரும் காலங்களில் மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் மேலும் வளர்ச்சியை எட்டும் நம்பிக்கை தங்களுக்கு வந்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: