மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரயில்வேயை பயன்படுத்தி சுமார் 3.2 லட்சம் கார்களை அனுப்பி இருக்கிறது. இதுவரை ஒரே வருடத்தில் ரயில்வேயைப் பயன்படுத்தி இவ்வளவு கார்களை அனுப்பியதில்லை, இதுவே முதல்முறை என்று மாருதி சுசுகி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஆட்டோமொபைல் ஃப்ரெய்ட் ட்ரெயின் ஆப்ரேட்டர் (Automobile Freight Train Operator - AFTO) உரிமத்தை பெற்ற இந்தியாவின் முதல் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் ஆகும். கடந்த 2013-ஆம் ஆண்டில் AFTO உரிமத்தை பெற்றது மாருதி சுசுகி நிறுவனம். இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் அதிவேக, அதிக திறன் கொண்ட ஆட்டோ வேகன் ரேக்குகளை உருவாக்கி இயக்கி கொள்ள AFTO உரிமம் அனுமதிப்பதாக நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மாருதி நிறுவனம் ரயில்வே மூலம் வாகனங்களை அனுப்பும் அளவுகளின் அடிப்படையில் சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வெளிச்செல்லும் லாஜிஸ்ட்டிக்ஸ்களில் ரயில்வேயின் பங்கு கடந்த 2013-ல் 5% ஆக இருந்து. இந்த நிலையில் கடந்த 2022-ல் 17%-ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாருதி நிறுவனம் சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ரயில்வேயைப் பயன்படுத்தி கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக 6,600 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வை ஈடுகட்டியுள்ளது. ரயில்வே மூலம் வாகனங்களை கொண்டு செல்ல மாருதி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 40 ரயில்வே ரேக்குகளை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு ரேக்கிலும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்ற முடியும்.
மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Hisashi Takeuchi வெளியிட்டுள்ள அறிக்கையில், Rail Mode-ஐ பயன்படுத்தி வெளிச்செல்லும் லாஜிஸ்ட்டிக்ஸ்களை அதிகரிப்பதற்கான எங்களின் மூலோபாயம் சரியாக வேலை செய்ததால் கடந்த 2022 காலண்டர் ஆண்டில் சாதனையாக சுமார் 3.2 லட்சம் வாகனங்களை அனுப்பி இருக்கிறோம்" என்றார். இதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் 1,800 மெட்ரிக் டன் CO2 உமிழ்வை ஈடுகட்டி இருக்கிறது மற்றும் 2022-ஆம் ஆண்டில் சுமார் 50 மில்லியன் லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்தி இருக்கிறது.
Rail Mode-ஐ பயன்படுத்தியதன் காரணமாக எங்கள் நிறுவனம் ஆண்டு முழுவதும் 45,000 டிரக் ட்ரிப்ஸ்களை தவிர்க்க உதவியது. ரயில்வேயைப் பயன்படுத்தி வாகனங்களை அனுப்பும் எங்கள் முயற்சியில் இந்திய ரயில்வேயின் தொடர்ச்சியான ஆதரவிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம். இதற்காக ஹரியானா (மனேசர்) மற்றும் குஜராத்தில் உள்ள எங்கள் ஃபெசிலிட்டிகளில் பிரத்யேக ரயில்வே சைடிங்ஸ்களை (railway sidings) அமைக்க இருக்கிறோம்.
இந்திய ரயில்வேயின் சேவை மற்றும் ஆதரவுக்கு நன்றி என்று அறிக்கையில் கூறி இருக்கிறார் Hisashi Takeuchi. தற்போது மாருதி நிறுவனம் டெல்லி-என்சிஆர் மற்றும் குஜராத் முழுவதும் 7 லோடிங் டெர்மினல்ஸ்களையும் பெங்களூர், நாக்பூர், மும்பை, கவுகாத்தி, முந்த்ரா துறைமுகம், இந்தூர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி-என்சிஆர், சிலிகுரி, கோயம்புத்தூர், புனே, அகர்தலா, சில்சார், ராஞ்சி மற்றும் லூதியானா ஆகிய 18 டெஸ்ட்டினேஷன் டெர்மினல்களையும் பயன்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cars, Indian Railways, Maruti Suzuki