• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அக்டோபர் மாத விற்பனையில் முதலிடத்தைப் பிடித்த மாருதி சுசூகியின் கார்..!

அக்டோபர் மாத விற்பனையில் முதலிடத்தைப் பிடித்த மாருதி சுசூகியின் கார்..!

மாருதி சுசூகி S-Presso

மாருதி சுசூகி S-Presso

மாருதி சுசூகியின் மினி ரக எஸ்யூவி ஆக வெளியாகி உள்ளதால் S-Presso காருக்குப் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அறிமுகமான முதல் மாதத்திலேயே அக்டோபரில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மாருதி சுசூகியின் S-Presso.

அறிமுகமான ஒரே மாதத்தில் மாருதி சுசூகி 10,634 S-Presso கார்களை விற்பனை செய்துள்ளது. 3.69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள S-Presso கார் ரெனால் க்விட் மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக வந்துள்ளது. மாருதி சுசூகியின் மினி ரக எஸ்யூவி ஆக வெளியாகி உள்ளதால் S-Presso காருக்குப் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

ஆல்டோ காரில் இருப்பது போன்றே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5,500 rpm-க்கு 67-bhp திறன் வெளியீடு கொண்டுள்ளது . டார்க் வெளியீடு 90 Nm ஆக உள்ளது. BS6 ரகம், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்ற வடிவமைப்பு சிஃப்ட், டிசைர், வேகன்ஆர் கார்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத் தோற்றம் கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கென 5 புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்யும் ஹோண்டா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: