• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 3 முறை விலை உயர்த்திய பிறகும் ஆகஸ்ட் மாதத்தில் 1.3 லட்சம் வாகனங்களை விற்ற மாருதி சுசுகி!

3 முறை விலை உயர்த்திய பிறகும் ஆகஸ்ட் மாதத்தில் 1.3 லட்சம் வாகனங்களை விற்ற மாருதி சுசுகி!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

ஏற்கனவே மாருதி சுசுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் இருந்து மேலும் வாகனங்களின் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது.

  • Share this:
எலக்ட்ரிக் உபகரணங்களின் தட்டுப்பாடுகளையும் தாண்டி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதன் வாகனங்களின் மொத்த விற்பனையை 1,24,624 யூனிட்களிலிருந்து 1,30,699 யூனிட்டுகளாக உயர்த்தியுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தின் மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை மட்டும் 1,05,775 யூனிட்கள் ஆகும். பிற அசல் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் (OEM) 4,305 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 20,619 யூனிட்கள் ஆகும்.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, " கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் விற்பனை அளவு மின்னணு பாகங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. ஆனால் நிறுவனம் இந்த பாதகமான தாக்கத்தை குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, "என்று தெரிவித்துள்ளது. மேலும், "கடந்த ஆகஸ்ட் மாதம், விற்பனை அளவு மின்னணு கூறுகளின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது, அதேபோல, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை அளவு கொரோனா தொடர்பான இடையூறுகளால் பாதிக்கப்பட்டது" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே மாருதி சுசுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் இருந்து மேலும் வாகனங்களின் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. உதிரி பாகங்களின் விலை மேலும் அதிகரித்ததால் தான் வாகனங்களின் விலையை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி இந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் ஹெட்ச்பேக் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி வகைகளுக்கும் நிறுவனம் விலைகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு குறித்து பேசிய மாருதி சுசுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் செயல் இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, "பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக எஃகு, தாமிரம், ரோடியம் மற்றும் பல்லேடியம் போன்றவற்றிக்கு அதிக செலவு செய்யவேண்டியிருப்பதால், வாகனங்களின் விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, " சராசரியாக,உதிரிபொருட்களின் விலை எங்களது ஒட்டுமொத்த வாகன செலவு கட்டமைப்பில் 70 சதவிகிதம் இருக்கும். செலவைக் குறைக்கவும் மற்றும் பிற நடவடிக்கைகளால் தேவையை புதுப்பிக்கவும், வாகன விலையை உயர்த்தாமல் இருக்கவும் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read... 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்தியாவில் அறிமுகம் - விலை குறித்த விவரங்கள்!

ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் உதிரி பொருட்களின் செலவுகள் காரணமாக வேறு வழியில்லாமல் வாகன விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாதிரியைப் பொறுத்து சராசரி விலை உயர்வின் அளவு 1.4 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி வகைகளில் உள்ள பல்வேறு கார் மாடல்களுக்கான விலையை நிறுவனம் உயர்த்தியது. அந்த நேரத்தில் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைப்படி வாகனங்களின் விலை ரூ.15,000- முதல் உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: