பயணிகள் வாகன விற்பனையில் 50 சதவீத சந்தையை பிடித்தது மாருதி சுசூகி

news18
Updated: May 23, 2018, 7:33 AM IST
பயணிகள் வாகன விற்பனையில் 50 சதவீத சந்தையை பிடித்தது மாருதி சுசூகி
மாருதி சுசூகி ஸ்விப்ட்
news18
Updated: May 23, 2018, 7:33 AM IST
பயணிகள் கார் விற்பனையில் 50 சதவீத விற்பனை சந்தையை மாருதி சுசூகி நிறுவனம் பிடித்துள்ளது. பயணிகள் வாகனத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டில்  5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசூகி நிறுவனத்தினுடைய 16 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 14 சதவீதம் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல்  கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாருதி சுசூகி நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் விற்பனை  முதன்முறையாக 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

பயன்பாட்டு வாகனங்களை பொறுத்தவரை மாருதி சுசூகி 27 சதவீத சந்தையை வைத்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 2,53,759 பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. பயன்பாட்டு வாகனங்களில் தொடர்ந்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமே முன்னணியில் இருந்து வருகிறது.


இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறுகையில், “ புதிய புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதும் பெட்ரோல் தொழில்நுட்பத்தை விட டீசல் தொழில்நுட்பத்தில் நிறுவனம் அதிகம் முதலீடு செய்வதும்தான் விற்பனை அதிகமாவதற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை சந்தை

2013 - 39.5%

Loading...

2014 - 42.10%

2015 - 45 %

2016 – 46.80%

2017 – 47.4%

2018 – 50.10%

மாருதி சுசூகியின் பயணிகள் வாகனத்தின் விற்பனை வளர்ச்சி

2015 – 11,70,702

2016 – 13,05,351

2017 – 14,43,641

2018 – 16,43,467

மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை

2015 – 9,73,531

2016 – 10,67,464

2017 – 10,95,891

2018 – 12,34,571

பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை

2015 – 68,198

2016 – 94,416

2017 – 1,95,741

2018 – 253,759

 
First published: April 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...