நாட்டின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஆண்டு டிசம்பர் 2022-ல் மொத்தம் 1,12,010 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி மட்டுமே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்றுள்ள ஒரே வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. எனினும், டிசம்பர் 2022-ல் நிறுவனத்தின் மொத்த விற்பனை 9% குறைந்து 1,12,010 யூனிட்டுகளாக இருந்தது. அதே போல 2021 டிசம்பர் மாதத்துடன், 2022 டிசம்பரை ஒப்பிடுகையில் மாருதி சுசுகி நிறுவனம் 2021-ல் சுமார் 1,23,016 யூனிட்களை விற்றுள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாருதி சுசுகி கார்களில் பலேனோ 16,932 யூனிட்கள் விற்பனையாகி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மாருதி பலேனோ டிசம்பர் 2021-ல் 14,558 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் 17% அதிகரித்து 16,932 யூனிட்களாக இருக்கிறது. ஆனால் நவம்பர் 2022-ல் மாருதி பலேனோ 20,945 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இதை ஒப்பிட்டு பாரத்தால் பலேனோவின் விற்பனை டிசம்பர் 2022-ல் சுமார் 19% குறைந்துள்ளது.
மாருதி பலேனோ கார் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.56 லட்சத்தில் தொடங்கி ரூ.9.83 வரை செல்கிறது.
கடந்த டிசம்பரில் அதிக விற்பனையான மாருதி சுசுகி காரின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் Maruti Eritiga MPV உள்ளது. 2022 டிசம்பரில் இந்த காரின் 12,273 யூனிட்களை மாருதி விற்றுள்ளது, இது டிசம்பர் 2021-ல் விற்கப்பட்ட 11,840 யூனிட்களை விட 4% அதிகமாகும். ஆனால் MoM சேல் நவம்பர் 2022-ல் விற்கப்பட்ட 13,818 யூனிட்களில் இருந்து 11% குறைந்துள்ளது.
எர்டிகா 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மூலம் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.8.41 லட்சத்தில் தொடங்கி 12.79 லட்சம் வரை செல்கிறது.
டிசம்பர் 2022-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுசுகி கார்களின் பட்டியலில் மூன்றாவதாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இருக்கிறது. கடந்த டிசம்பரில் இந்த காரின் 12,061 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 2021 டிசம்பரில் இந்த காரின் 15,661 யூனிட்களை மாருதி விற்றது. ஆனால் இந்த காரின் MoM விற்பனையும் 20% குறைந்துள்ளது.
2022 நவம்பரில் ஸ்விஃப்ட் காரின் 15,153 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. ஸ்விஃப்ட் கார் 1.2 பெட்ரோல் எஞ்சினுடன் வழங்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.91 லட்சத்தில் தொடங்கி 8.71 லட்சம் வரை செல்கிறது.
பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது Dzire sedan. இந்த கார் கடந்த டிசம்பர் 2021-ல் 10,633 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், 2022 டிசம்பர் விற்பனை 13% அதிகரித்து 11,997 யூனிட்டுகளாக இருந்தது. அதே சமயம் 2022 நவம்பரில் விற்கப்பட்ட 14,456 யூனிட்களை ஒப்பிடும் போது MoM விற்பனை 17% குறைந்துள்ளது.
டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்கி ரூ.9.17 லட்சம் வரை செல்கிறது.
பட்டியலில் ஐந்தாவதாக இருக்கிறது Maruti Brezza SUV. இந்த கார் டிசம்பர் 2021-ல் 9,531 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2022-ல் இதன் விற்பனை 18% அதிகரித்து 11,200 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. பிரெஸ்ஸா 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி 13.8 லட்சம் வரை செல்கிறது.
பட்டியலில் அடுத்து இருப்பது கார் Maruti Eeco van. டிசம்பர் 2021-ல் 9,165 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டிருந்த நிலையில் இதன் MoM சேல் 15% மேம்பட்டு 10,581 யூனிட்டுகளாக இருக்கிறது. நவம்பர் 2022-ல் 7,183 யூனிட்கள் விற்கப்பட்டுள்ன. இந்த கார் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.10 லட்சத்தில் தொடங்கி ரூ.8.13 லட்சம் வரை செல்கிறது.
2021 டிசம்பரில் 19,728 யூனிட்களை விற்ற நிலையில், கடந்த டிசம்பரில் WagonR-ன் 10,181 யூனிட்களை மாருதி விற்பனை செய்துள்ளது. அதே போல நவம்பர் 2022-ல் 14,720 யூனிட் WagonR விற்கப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.44 லட்சத்தில் தொடங்கி ரூ.7.08 லட்சம் வரை செல்கிறது. பட்டியலில் அடுத்துள்ள மாருதி ஆல்ட்டோ காரை டிசம்பர் 2022-ல் 8,648 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. நவம்பர் 2022-ல் 15,663 மாருதி ஆல்ட்டோ யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கிராண்ட் விட்டாராவின் 6,171 யூனிட்கள் டிசம்பர் 2022-ல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நவம்பரில் கிராண்ட் விட்டாராவின் 4433 யூனிட்களை விற்கப்பட்டன. கிராண்ட் விட்டாரா 1.5 லிட்டர் NA மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் NA ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் உள்ளிட்ட 2 எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது. டிசம்பர் 2021-ல் விற்கப்பட்ட 3,209 யூனிட்களில் இருந்து இக்னிஸ் மைக்ரோ எஸ்யூவி-யின் YoY விற்பனனை 63% அதிகரித்து 5,241-ஆக உயர்ந்துள்ளது.
XL6 -ன் விற்பனை டிசம்பர் 2022-ல் 3,364 யூனிட்களாக உள்ளது. XL6 இன் விற்பனையும் மேம்பட்டது, டிசம்பர் 2022 இல் நிறுவனம் 3,364 விற்பனையானது. XL6 கார் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. டிசம்பர் 2022-ல், Ciaz-ன் விற்பனை 1,154 யூனிட்களாகவும், S-Pressoவின் விற்பனை 1,117 யூனிட்களாகவும், Celerio-வின் விற்பனை யூனிட்களாகவும் இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology