Home /News /automobile /

அதிரடி வெளியீட்டுக்குத் தயாராகி உள்ள மாருதி சுசூகி S-Presso மைக்ரோ எஸ்யூவி!

அதிரடி வெளியீட்டுக்குத் தயாராகி உள்ள மாருதி சுசூகி S-Presso மைக்ரோ எஸ்யூவி!

S-Presso

S-Presso

என்ஜின் விவரங்கள் குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இரண்டு பெட்ரோல் என்ஜின் ரகங்கள் ஆகவே S-Presso இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
மாருதி சுசூகி நிறுவனம் புதிதாக S-Presso மைக்ரோ எஸ்யூவி காரை அதிரடியாக வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடுகிறது.

மாடல் அறிமுகம் செய்த சில நாட்களிலேயே வெளியீட்டுக்கும் தயாராகி உள்ளது மாருதி சுசூகி. புதிதாக கார்களில் அலாய் வீல்களுக்குப் பதிலாக S-Pressoவில் ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. முதல்முறை கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகவே S-Presso இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் புதிதாக சுசூகி ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் வலியுறுத்தும் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகவே S-Presso வெளியாக உள்ளது. டூயல் ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட், சீட்பெல்ட் என அத்தனை அம்சங்களும் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆக S-Presso இருக்கும்.

என்ஜின் விவரங்கள் குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இரண்டு பெட்ரோல் என்ஜின் ரகங்கள் ஆகவே S-Presso இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டதாக வரலாம்.

மேலும் பார்க்க: கார்ப்ரேட் வரிக் குறைப்பால் விலை குறைந்த மாருதி சுசூகி கார்கள்!

காப்பான் லாபமா? நஷ்டமா?
Published by:Rahini M
First published:

Tags: Maruti Suzuki

அடுத்த செய்தி