• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 11 நாளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு... மாருதி சுசூகி S-Presso காருக்கு நல்ல வரவேற்பு!

11 நாளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு... மாருதி சுசூகி S-Presso காருக்கு நல்ல வரவேற்பு!

S-Presso

S-Presso

மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாருதி சுசூகியின் மினி ரக எஸ்யூவி காரான S-Presso-வுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்த S-Presso காரை அறிமுகமான 11 நாட்களில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மாருதி ஒரு மினி ரக காரை அறிமுகம் செய்துள்ளது. S-Presso காரின் விலை 3.69 லட்சம் முதல் 4.94 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆல்டோ காரில் இருப்பது போன்றே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5,500 rpm-க்கு 67-bhp திறன் வெளியீடு கொண்டுள்ளது . டார்க் வெளியீடு 90 Nm ஆக உள்ளது. BS6 ரகம், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்ற வடிவமைப்பு சிஃப்ட், டிசைர், வேகன்ஆர் கார்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத் தோற்றம் கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும் பார்க்க: ஹெக்டார் இரண்டாம் கட்ட முன்பதிவுக் காலம்...அதீத வரவேற்பால் திணறும் MG மோட்டார்ஸ்

தீபாவளி புக்கிங்: ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: