Home /News /automobile /

6 ஏர் பேக்குகள் கட்டாயமா?.. மத்திய அரசுக்கு மாருதி சுஸுகி வைத்த கோரிக்கை!

6 ஏர் பேக்குகள் கட்டாயமா?.. மத்திய அரசுக்கு மாருதி சுஸுகி வைத்த கோரிக்கை!

6 seater cars

6 seater cars

Maruti Suzuki | கார்களில் 6 ஏர் பேக்குகள் இருப்பது கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொகுசு பயணத்தை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவதால், டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களில் பாதுகாப்புக்கென தனி கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் மத்திய அரசு விபத்துக்களை தடுக்கும் நோக்கில் நடப்பு ஆண்டில் பல்வேறு கட்டாய சட்டங்களை கொண்டு அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதில், இனி 8 பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் கார்களுக்கு குறைந்தபட்சம் 6 ஏர் பேக் கட்டாயம் என்று புதிய சட்டம் ஒன்றில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டம் காரின் பின்னால் பயணிப்பவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த சட்டம் மூலம் விபத்தில் இருந்து பயணிகளின் உயிர் காக்கப்படும் என்றாலும், கார்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர் கார் வாங்க வேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் களக்கம் அடைந்தன.

ஏற்கனவே காருக்கு 6 ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு கொடுக்கும் டொயோட்டா போன்ற சில கார் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு கவலை இல்லை என்றாலும், பிற கார் தயாரிப்பாளர்களின் ஆரம்ப நிலை விற்பனைக்கு ஆபத்தாக அமையும் என்ற கருத்து உலவி வந்தது. இந்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களில் 6 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.



இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆர்சி பார்கவா, இந்தியாவில் ஏற்கனவே கார்களுக்கான சந்தை சுருங்கி வருவதாகவும், இனி கார்களில் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டியது கட்டாயம் என்ற விதியால் கார்களின் விலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் கார் உற்பத்தி துறை பாதிக்கப்படக்கூடும் என்பதால் மத்திய அரசு இந்த விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!

மாருதி சுஸுகி ஆல்டோ போன்ற சிறிய கார்களில் 6 ஹேர்பேக்குகளை பொருத்த வேண்டும் என்றால், அதன் வடிவமைப்பை மறுசீரமைப்பு செய்யது, கூடுதல் சென்சார்களை இணைக்க வேண்டும். இதனால் காரின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடும்.



10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட விலைகளில் சொகுசு கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரூபாயை செலுத்துவது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்காது. ஏனெனில் அவர்கள் தங்களது கார்களில் 6 ஹேர்பேக்குகள் பொருத்தப்பட்டிருப்பதை ஒரு மதிப்பு கூட்டலாக எண்ணுவார்கள். ஆனால் இருசக்கர வாகனத்தில் இருந்து காருக்கு மாற நினைக்கும் ஆரம்ப நிலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா என்பது கூடுதல் பிரீமியம் மற்றும் வட்டி என்பதால் அவர்கள் கார் வாங்கும் எண்ணத்தையே கைவிடும் அபாயம் உள்ளது.

Also Read : எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் இந்தியாவில் வரி விலக்கு

மேலும், சிறிய கார்களுக்கான கூடுதல் விலை, பலருக்கும் எட்டாக்கனி என்ற சூழ்நிலையை உருவாக்க கூடும். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் போது, நடுத்தர மக்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் ஆல்டோ போன்ற மாடல்களை நிறுத்தப்படலாம், இதனால் குறிப்பிட்ட கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையும் பாதிக்கப்படலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki

அடுத்த செய்தி