ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

வீழ்ச்சியிலும் முதலிடம்...சரியும் மாருதி சுசூகி சாம்ராஜ்யம்...!

வீழ்ச்சியிலும் முதலிடம்...சரியும் மாருதி சுசூகி சாம்ராஜ்யம்...!

மாருதி சுசூகி எர்டிகா

மாருதி சுசூகி எர்டிகா

யூவி ரக கார்களைப் பொறுத்தவரையில் விதாரா ப்ரெஸ்சா, எஸ்-க்ராஸ், எர்டிகா விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் தற்போது வீழ்ச்சியிலும் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் 24.4 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் விற்பனை விகிதத்தை இன்று மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பரில் 1,62,290 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த செப்டம்பரில் 1,22,640 வாகனங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரையில் 26.7 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,53,550 வாகனங்களும் இந்த ஆண்டு செப்டம்பரில் 1,12,500 வாகனங்களும் விற்பனை ஆகியுள்ளன. அதிகப்படியான வீழ்ச்சி மாருதி சுசூகியின் மினி ரக கார்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ளது.

ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய கார்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. காம்பேக்ட் கார்களான சிஃப்ட், செலெரியோ, இக்னிஸ், பலேனோ, டிசைர் ஆகிய கார்களின் விற்பனை விகிதம் 22.7 ஆக சரிந்துள்ளது. யூவி ரக கார்களைப் பொறுத்தவரையில் விதாரா ப்ரெஸ்சா, எஸ்-க்ராஸ், எர்டிகா விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

ஏற்றுமதி 17.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8,740 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த வேளையில் இந்த ஆண்டு செப்டம்பரில் 7,188 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: கார்ப்ரேட் வரிக் குறைப்பால் விலை குறைந்த மாருதி சுசூகி கார்கள்!

உலகில் எங்கு சென்றாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள் - மோடி

First published:

Tags: Maruti Suzuki