• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மெதுவாக முன்னேறும் மாருதி சுசூகி... சூடுபிடித்த அக்டோபர் மாத விற்பனை...!

மெதுவாக முன்னேறும் மாருதி சுசூகி... சூடுபிடித்த அக்டோபர் மாத விற்பனை...!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

”மினி ரக கார்களான ஆல்டோ, வேகன்ஆர், எஸ்ப்ரெஸ்சோ ஆகிய கார்கள் அதிகப்படியாக விற்பனையாகி உள்ளன”

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் முன்னனி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கடந்த அக்டோபர் மாதத்தில் 4.5 சதவிகித வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியில் பயணிக்கும் போது அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்தன. முன்னணியில் இருந்த மாருதி சுசூகி கூட தனது உற்பத்தியை நிறுத்தமளவுக்கும் வீழ்ந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் டிமாண்ட் இல்லாததால் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் பின் தங்கிக் காண்டப்பட்டது மாருதி.

ஆனால், அக்டோபர் மாத விற்பனையில் 4.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது மாருதி சுசூகி. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,53,435 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த அக்டோபரில் இந்த விற்பனை எண்ணிக்கை 1,46,766 என இருந்தது. உள்நாட்டு விற்பனையும் 4.5 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுத்தந்துள்ளது.

மாருதி சுசூகியின் மினி ரக கார்களான ஆல்டோ, வேகன்ஆர், எஸ்ப்ரெஸ்சோ ஆகிய கார்கள் அதிகப்படியாக விற்பனையாகி உள்ளன. காம்பேக்ட் ரக கார்களான சிஃப்ட், செலெரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் போன்ற கார்களின் விற்பனை 15.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மேலும் பார்க்க: 10 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 360 கிமீ பயணிக்கலாம்..!- புதிய எலெக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகம்

பிகில் லாபமா நஷ்டமா? உண்மை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: