Home /News /automobile /

கார்ப்ரேட் வரிக் குறைப்பால் விலை குறைந்த மாருதி சுசூகி கார்கள்!

கார்ப்ரேட் வரிக் குறைப்பால் விலை குறைந்த மாருதி சுசூகி கார்கள்!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

சமீபத்தில்தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் மாருதி சுசூகி உள்ளிட்ட பல கார் உற்பத்தி நிறுவனங்களும் விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

  • News18
  • Last Updated :
கார்ப்ரேட் வரி குறைக்கப்பட்டதால் அதனது பயனை வாடிக்கையாளர்களும் அனுபவிக்க வேண்டும் என கார்களின் விலையை மாருதி சுசூகி குறைத்துள்ளது.

மாருதி சுசூகியின் பல மாடல்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆல்டோ 800, ஆல்டோ K10, சிஃப்ட் டீசல், செலெரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசைர் டீசல், டூர் S டீசல், விதாரா ப்ரெஸ்சா மற்றும் S-க்ராஸ் ஆகிய கார்களின் விலை குறைந்துள்ளது.

குறைக்கப்பட்ட விலைப்பட்டியல் இன்று முதலே நாடு முழுவதும் அமலாகியுள்ளது. சமீபத்தில்தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் மாருதி சுசூகி உள்ளிட்ட பல கார் உற்பத்தி நிறுவனங்களும் விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இதையடுத்து பண்டிகைகால சலுகை, தற்போது கார்ப்ரேட் வரிச்சலுகை என மாருதி கார்களின் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் முதன்முறையாக சொந்தமான கார் வாங்க வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த நேரம் என்கிறது மாருதி சுசூகி. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக இருந்த மாருதி சுசூகி வீழ்ச்சியால் இரண்டாம் இடத்துக்கு வந்தது. பல விதமான சலுகைகள் மற்றும் விலைக்குறைப்பின் மூலம் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வரும் ஹூண்டாய் எலான்ட்ரா... தொடங்கியது முன்பதிவு!

என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்
Published by:Rahini M
First published:

Tags: Car, Maruti Suzuki

அடுத்த செய்தி