ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மிகப்பெரிய வாகன முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாருதி சுசுகி - 900 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

மிகப்பெரிய வாகன முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாருதி சுசுகி - 900 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Maruti Suzuki | ஹரியானாவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஏற்கனவே 2 உற்பத்தி ஆலைகள் உள்ளது.

சமீபத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஹரியானாவின் கார்கோடாவில் (Kharkhoda) அதன் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை உருவாக்க, ஹரியானா மாநில அரசுடன் நில ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. மாருதி சுசுகி - ஹரியானா அரசு இடையில் கையெழுத்தாகி உள்ள நில ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் சுமார் 800 ஏக்கர் நிலம் மாருதி சுசுகி நிறுவனத்துக்கும், கூடுதலாக 100 ஏக்கர் நிலம் சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நிலம், கார் உற்பத்தி ஆலை மற்றும் எதிர்கால ஆலை ஆதரவுக்கான சில பொதுவான உள்கட்டமைப்பு உள்ளிட்டவை அடங்கும்.

தற்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தத்தின் படி ஒதுக்கப்பட்டுள்ள 800 ஏக்கர் நிலம் ஏறத்தாழ ரூ. 20,000 கோடி முதலீட்டை கொண்டிருக்கும். இதில் ரூ.2,131 கோடி ஏற்கனவே நிலத்திற்காக செலுத்தப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி தனது புதிய ஆலையை அமைக்கும் கார்கோடாவில் உள்ள இண்டஸ்ட்ரியல் மாடல் டவுன்ஷிப் (IMT) ஒரு ஒருங்கிணைந்த தொழில்துறை நகரமாகும், இது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் சுமார் 3,217 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது.

டெல்லிக்கு அருகில் உள்ளதாலும், KMP எக்ஸ்பிரஸ்வே வழியாக டெல்லி பகதூர்கர், குருகிராம் மற்றும் சோனிபட் உடனான நேரடி இணைப்பு காரணமாகவும் ஹரியானாவில் தொழில்துறை வளர்ச்சிக்கான அடுத்த முனையாக கார்கோடாவில் அமையும் IMT உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாருதி சுசுகியின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் சேர்மேன் கெனிச்சி அயுகாவா பேசுகையில், ஹரியானாவின் குர்கானில் அமைக்கப்பட்ட எங்கள் முதல் ஆலை 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அடுத்து இதே மாநிலத்தின் மானேசர் ஆலை 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளது.

Also see... அதிநவீன வசதிகளுடன் Picasso D15 இ-ஸ்கூட்டர் அறிமுகம் - முழு விவரங்கள்

ரோஹ்தக்கில் 600 ஏக்கர் R&D மையத்துடன் எங்கள் மையத்தை மேலும் விரிவுப்படுத்தினோம். தற்போது கர்கோடாவில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் எங்களின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைக்க கையெழுத்திட்டுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார். புதிய ஆலை அமைக்க வசதியாக நிலம் ஒதுக்கீடு செய்து தந்ததற்காக ஹரியானா முதல்வர் மனோகர் லால் மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா ஆகியோரின் ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்தார்.

ஹரியானாவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஏற்கனவே 2 உற்பத்தி ஆலைகள் உள்ள நிலையில் கார்கோடாவில் அமைக்கப்பட இருக்கும் மூன்றாவது உற்பத்தி ஆலை சுமார் 2,50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஆலை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புதிதாக அமைய இருக்கும் இந்த ஆலையின் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஹரியானா மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Maruti Suzuki