ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பிரேக்கில் பிரச்னை இருக்கு.. 9,000 கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி!

பிரேக்கில் பிரச்னை இருக்கு.. 9,000 கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன விற்பனையை மாருதி நிறுவனம் பதிவு செய்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் வேகன் ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ் ஆகிய 3 மாடல்களில் மொத்தம் 9,925 கார்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தக் கார்களில் ரியர் பிரேக் அசெம்ப்ளி பின்-இல் சிக்கல் எழுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவை மாருதி நிறுவனம் எடுத்துள்ளது. குறிப்பாக, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் உற்பத்தியான கார்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியர் பிரேக் அசெம்ப்ளி பின்-இல் எழுந்துள்ள சிக்கல் காரணமாக வேகன் ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ் ஆகிய கார்களில் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள சௌகரியமாக அமையாது என்று மாருதி நிறுவனம் கருதுகிறது. இந்த ரியர் பின் கோளாறு காரணமாக பிரேக்குகளில் நீண்ட கால பிரச்சனைகள் நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

கார்களை திரும்பப் பெற்று, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அதில் சில சாதனங்களை மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரியர் பிரேக் அசெம்ப்ளி பின்-இல் கோளாறுகள் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தக் கோளாறு காரணமாக இரைச்சல் ஏற்படும்.

நீண்ட தூரம் பயணிக்கையில் பிரேக்களின் செயல்திறன் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மிகுந்த முன்னெச்சரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சந்தேகத்துக்குரிய வாகனங்களை திரும்பப் பெற்று, அவற்றில் உள்ள கோளாறுக்குரிய பாகங்களை மாற்றுவது என்று மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விற்பனைக்கு இடையே சறுக்கல் : 

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன விற்பனையை மாருதி நிறுவனம் பதிவு செய்திருந்தது. குறிப்பாக மாருதி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த மாருதி கிராண்ட் விதாரா மற்றும் மாருதி சுஸுகி பிரேஸா ஆகிய மாடல்களின் காரணமாக இந்த அதிக விற்பனை நடைபெற்றது. அதேபோன்று பலீனோ, ஸ்விஃப்ட், டிசையர் போன்ற இதர மாடல்களும் பெருமளவுக்கு விற்பனையாகியிருந்தன.

Also Read : இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

அதிலும் கிராண்ட் விதாரா அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே 55 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து விட்டன. முன்னதாக, கடந்த ஜூன் 30ஆம் தேதி இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. சிறிய வகை கார் விற்பனைகளில், இந்திய அளவில் 40 சதவீத வர்த்தகத்தை மாருதி நிறுவனம் தக்க வைத்துள்ளது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Automobile, Maruti, Maruti Suzuki