ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Super Carry வாகனங்களை திரும்பபெறும் மாருதி சுசுகி நிறுவனம் - என்ன பிரச்சனை?

Super Carry வாகனங்களை திரும்பபெறும் மாருதி சுசுகி நிறுவனம் - என்ன பிரச்சனை?

மாதிரி படம்

மாதிரி படம்

சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிகார் விபத்தில் மரணமடைந்தது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் இலகுரக வர்த்தக வாகனம் சூப்பர் கேரி (super carry). இந்த சூப்பர் கேரி வாகனத்தின் டிரைவர் பக்கம் இருக்கும் சீட்டில் குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.

  இதனை தொடர்ந்து சூப்பர் கேரியின் பழுதடைந்த டிரைவர் பக்க சீட் குறைபாடுகளை களைய மார்க்கெட்டில் இருந்து சுமார் 5,002 யூனிட் வாகனங்களை திரும்ப அழைப்பதாக அறிவித்து உள்ளது. இந்த பாதிக்கப்பட்ட வாகனங்கள் மே 4 மற்றும் ஜூலை 30, 2022 க்கு இடையில் தயாரிக்கப்பட்டதாக சமீபத்திய தகவலில் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது

  என்ன பிரச்சனை.?

  சூப்பர் கேரி வாகனத்தின் இணை ஓட்டுனர் இருக்கையின் (co-driver seat) சீட் பெல்ட்டில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இணை ஓட்டுனர் இருக்கையின் சீட் பெல்ட் பக்கிள் பிராக்கெட்டில் இணைக்கப்பட்டிருக்கும் போல்ட்டை ஆய்வு செய்து சரி செய்ய சுமார் 5,002 யூனிட் வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிக்கையில் மாருதி சுசுகி குறிப்பிட்டு உள்ளது. சூப்பர் கேரி வாகனத்தில் இருப்பதாக கூறப்படும் இணை ஓட்டுனர் சீட் பெல்ட்டின் குறைபாடுகளை சரி செய்ய கடந்த மே 4, 2022 முதல் ஜூலை 30, 2022 வரை தயாரிக்கப்பட்ட 5,002 சூப்பர் கேரி வாகனங்களை மாருதி சுசுகி ரீகால் செய்து உள்ளது.

  போல்ட் டார்க்கில் பிரச்சனை இருக்கலாம்.!!

  போல்ட் டார்கிங்கில் (Bolt torquing) அதாவது போல்ட்களை முறுக்கியதில் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அறிக்கையில் மாருதி சுசுகி இந்தியா கூறி இருக்கிறது. இந்த குறைபாட்டால் சூப்பர் கேரி வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களது வாகனத்தை ஆய்வு செய்ய மற்றும் பழுது பார்ப்பதற்காக மாருதி சுசுகியின் அங்கீகரிக்கப்பட்ட பணிமனை மூலம் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

  Read More: இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

  ஆய்வு மற்றும் சர்விஸ் இலவசம் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மிஸ்திரி பின் சீட்டில் அமர்ந்திருந்தார் ஆனால்சீட் பெல்ட் போடவில்லை. இதனை தொடர்ந்து பின் இருக்கைகளில் கூட பயணிகள் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக்க நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் சுமார் 5,000 வாகனங்களை மாருதி சுசுகி ரீகால் செய்து உள்ளது.

  இதனிடையே மாருதி சுசுகி இந்தியாவில் நிறுவன அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா இதை பற்றி குறிப்பிட்டுள்ளார். சுசுகியின் உலகளாவிய உற்பத்தியில் மாருதியின் பங்கு 60%-க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார் பார்கவா.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Maruti, Maruti Suzuki, Motor