• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 9 மாத சுணக்கத்திற்குப் பின் உற்பத்தியை 4% அதிகரித்த மாருதி சுசூகி..!

9 மாத சுணக்கத்திற்குப் பின் உற்பத்தியை 4% அதிகரித்த மாருதி சுசூகி..!

அக்டோபரில் தனது உற்பத்திய 20.7 சதவிகிதம் குறைத்த மாருதி சுசூகி தற்போது மீண்டும் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடந்த நவம்பர் மாதம் மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் தனது உற்பத்தியை 4.33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

    9 மாத உற்பத்தி சுணக்கத்திற்குப் பின்னர் மாருதி சுசூகி நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது. டிமாண்ட் குறைவு, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக கார்கள் உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்பட்டது.

    கடந்த நவம்பர் மாதம் மட்டும் மாருதி சுசூகி 1,41,834 கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. பேசெஞ்சர் ரக வாகனங்கள் 3.67 சதவிகிதம் அதிகரித்து 1,39,084 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களில் ஆல்டோ, வேகன்ஆர், செலெரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களின் உற்பத்தி 6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 1,02,185 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    யூவி ரக கார்களில் விதாரா ப்ரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களுக்குக் கிடைக்கும் வரவேற்பால் உற்பத்தி 18 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் தனது உற்பத்திய 20.7 சதவிகிதம் குறைத்த மாருதி சுசூகி தற்போது மீண்டும் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து வருகிறது.

    மேலும் பார்க்க: பென்ஸ் காருக்குப் போட்டியாக களம் இறங்கும் கியாவின் Carnival MPV...!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: