முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / மாட்டு சாணத்தால் இயங்கும் கார் - மாருதி சுசுகி நிறுவனத்தின் பலே திட்டம்.!

மாட்டு சாணத்தால் இயங்கும் கார் - மாருதி சுசுகி நிறுவனத்தின் பலே திட்டம்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பயோ கேஸ் மூலம் இயங்கும் காரை தயாரிக்க மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

உலகம் முழுவதும் மாற்று எரிசக்தி பயன்பாட்டிற்கான திட்டங்கள் உலகம் முழுவதும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மின் உற்பத்தியை போலவே, வாகனப் போக்குவரத்திலும் மாற்றி ஆற்றலை பயன்படுத்தி இயக்கும் விதத்தில் புதிய வகை வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் டீசல் எரிவாயுவுக்கு பதிலாக மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்கள், எத்தனால், ஹைட்ரஜன் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் பணிகள் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அரசும் இது போன்ற திட்டங்களுக்கு பல சலுகைகள் வழங்கி ஊக்குவிக்கின்றன.

இந்நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் 2070க்குள் இந்தியாவில் ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை கொண்டு வாகன தயாரிப்பு திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பயோ கேஸ் மூலம் இயங்கும் காரை தயாரிக்க மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி இதற்காக உள்ளூர் பண்ணை நிறுவனங்களுடன் இணைந்து மாட்டு சானத்தை வாங்கி anaerobic digestion முறைப்படி பயோ கேஸ் எரிவாயுவை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மாடு வளர்ப்பு பரவலாக உள்ள காரணத்தினால் இந்த திட்டம் மாபெரும் வெற்றி பெரும் எனவும், இதனால் மாடு வளர்க்கும் விவசாயிகளும் நல்ல பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் கார் ஒரு நாள் முழுவதும் இயக்க பத்து மாடுகளின் சாணம் போது என சராசரியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இருந்து தயாரிக்கப்படும் பயோ கேஸ் சிஎன்ஜி கார் வாகனங்களுக்கு விநியோகித்து 70 சதவீத சிஎன்ஜி கார் சந்தையை திட்டத்தின் கீழ் கொண்டு வர மாருதி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த திட்டத்தை கருத்தில் கொண்டு ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமான ஃபுஜிசன் அஸகிரியில் மாருதி சுசுகி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் திட்டம் வெற்றி பெற்றால், அதை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் விரிவாக்கம் செய்வோம் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு என்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என மாருதி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Automobile, Maruti Suzuki