2022 மாருதி சுசுகி XL6 (2022 Maruti Suzuki XL6) காருக்கான புக்கிங்ஸை, இந்தியாவில் ரூ.11,000-க்கு ஓபன் செய்து இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள NEXA டீலர்ஷிப்கள் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் லாகின் செய்வதன் மூலம் 2022 மாருதி XL6 காரைஆரம்ப தொகையாக ரூ.11,000-க்கு புக்கிங் செய்யலாம்.
நெக்ஸ்ட்-ஜென் கே-சீரிஸ் எஞ்சின், புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பல அம்சங்கள் நிரம்பிய இந்த புதிய கார், இந்தியாவில் 2022-ஆம் ஆண்டில் மாருதியின் முக்கிய அறிமுகங்களில் ஒன்றாகும். புதிய அப்டேட்டட் Maruti Suzuki XL6 காரானது நாடு முழுவதும் உள்ள 410 Nexa ஷோரூம்களில் விரைவில் வாங்க கிடைக்கும் என்று மாருதி சுசுகி நிறுவனம் கூறி இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி எர்டிகாவிற்கான புக்கிங்ஸ் குறித்து நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மாருதி சுசுகியின் இந்த சமீபத்திய அறிவிப்பு வெளி வந்துள்ளது.
இதன் மூலம் மாருதி சுசுகி இரண்டு கார்களுக்கும் ஒரே மாதிரியான அப்டேட்களை செய்து அவற்றை ஒன்றாக அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இருப்பினும் எர்டிகாவுடன் ஒப்பிடும்போது XL6 காருக்கு பிரீமியம் டேக் கொடுக்கும் வகையில் இன்னும் சில அம்சங்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே புதிய Maruti Suzuki XL6-ன் ஒரு சிறிய வான்வழி வீடியோ மற்றும் அதன் ரூஃப் மற்றும் பானட்டை காட்டும் போட்டோவை சோஷியல் மீடியாவில் நிறுவனம் ஷேர் செய்துள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & சேல்ஸ் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், கடந்த 2 வருடங்களாக பிரீமியம் MPV-களுக்கான தேவை அதிகரித்து வருவதை காண்கிறோம். எங்களது லேட்டஸ்ட் ஆல் நியூ XL6 அதன் சூப்பரான ஸ்டைலிங், மேம்பட்ட பாதுகாப்புடன் புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஸ்டைல் அனுபவத்தை வழங்கும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Also Read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..
புதுப்பிக்கப்பட்ட XL6 காரானது திருத்தப்பட்ட க்ரில், புதுப்பிக்கப்பட்ட LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் திருத்தப்பட்ட ஃப்ரன்ட் மற்றும் பேக் பம்ப்பர்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் போன்ற சில டிசைன் அப்டேட்ஸ்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் இன்டீரியரில் கேபின் சிறிய மாற்றங்களை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
Also Read : ரூ.2 லட்சத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த பைக்குகளின் பட்டியல்
இதனிடையே அப்டேட்டட் XL6 கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் வரும் என்பதை மாருதி உறுதிப்படுத்தி உள்ளது, எனவே இது மாருதியின் புதிய SmartPlay Pro 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். அதே போல 6 சீட்கள் கொண்ட புதிய Suzuki XL6 மற்ற சிறிய மாற்றங்களுக்கிடையில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரியையும் பெறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.