₹1.05 லட்சம் வரையில் தள்ளுபடி... மாருதி சுசூகி கார்களுக்கு அதிகப்படியான சலுகை!

சிஃப்ட் பெட்ரோல் ரக காருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் எக்ஸ்சேஞ்ச் கார்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை உள்ளது.

Web Desk | news18
Updated: September 9, 2019, 10:51 PM IST
₹1.05 லட்சம் வரையில் தள்ளுபடி... மாருதி சுசூகி கார்களுக்கு அதிகப்படியான சலுகை!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 9, 2019, 10:51 PM IST
மாருதி விதாரா ப்ரெஸ்ஸா, சிஃப்ட், டிசைர், ஈகோ உள்ளிட்ட மாருதி சுசூகியின் கார்களுக்கு அதிகப்படியான விலைச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது கார்களுக்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. அரினா டீலர்ஷிப்-ன் கீழ் விற்பனையாகும் மாருதி சுசூகியின் கார்களுக்கு இந்தத் தள்ளுபடி சலுகை பொருந்தும்.

மாருதி சுசூகியின் எஸ்யூவி ரகங்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள விதாரா ப்ரெஸ்ஸா காருக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. கூடுதலாக ஐந்து ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டியும் வழங்கப்படுகிறது. வாரணட்டி வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கேற்ற கேஷ்-பேக் வழங்கப்படுகிறது.


இதேபோல், செடான் ரக கார்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடியும் டீசல் ரக கார் என்றால் ஐந்து ஆண்டுகால வாரண்ட்டியும் கொடுக்கப்படுகிறது. டிசைர் காருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. சிஃப்ட் பெட்ரோல் ரக காருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் எக்ஸ்சேஞ்ச் கார்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை உள்ளது.

ஆல்டோவுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலேரியோவுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஈகோ காருக்கு 45 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆம்னி ரக காருக்கு 35ஆயிரம் ரூபாய் வரையிலும் வேகன் ஆர் காருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைச்சலுகை உள்ளது.

மேலும் பார்க்க: ’வேகமாக சென்றதால் என் காருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்’- ட்ராஃபிக் அபராதம் குறித்து நிதின் கட்கரி

Loading...

டாஸ்மாக்கில் 120% லாபத்தில் விற்க்கப்படும் மதுபானங்கள்!
First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...