Maruti Suzuki: மாருதி சுசுகியின் அட்டகாச ஆஃபர்கள் - ஸ்விஃப்ட், பலேனோ மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி!

maruti suzuki

மே 2021ல் பல்வேறு மாடல் மாருதி சுசுகி கார்களில் நீங்கள் பெறக்கூடிய அனைத்து சலுகைகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

  • Share this:
நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாருதி சுசுகி டீலர்ஷிப்கள் மாருதி நிறுவனத்தின் வெவ்வேறு மாடல் கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்க துவங்கி உள்ளன.  இந்த சிறப்பு தள்ளுபடிகளை மாருதி சுசுகியின் Nexa மற்றும் Arena டீலர்ஷிப்களில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் , கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்ஸ்  மற்றும் அப் ஃப்ரென்ட் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் (upfront cash discounts) மூலம் பெறலாம். மே 2021ல் பல்வேறு மாடல் மாருதி சுசுகி கார்களில் நீங்கள் பெறக்கூடிய அனைத்து சலுகைகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

Nexa ஷோரூம் ஆஃபர்கள்:

* நிறுவனத்தின் மாருதி சுசுகி இக்னிஸ் ( Ignis) மாடல் கார் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.3,000 மற்றும் ரூ .12,500 வரை கேஷ் டிஸ்கவுன்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

* மாருதி சுசுகி பலேனோ (Baleno) மாடல் கார் வாங்குபவர்களுக்கு கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.3,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ .10,000 மற்றும் கேஷ் டிஸ்கவுன்ட் 12,500 வரை கிடைக்கிறது.

* மாருதி சுசுகி எஸ்-க்ராஸ் ( S-Cross) மாடல் காரில் ரூ .15,000 கேஷ் டிஸ்கவுன்ட், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.5,000 , ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சிறப்பு தள்ளுபடிகள் Nexa ஷோவ்ரூம்களில் வழங்கப்படுகின்றன.

* மாருதி சுசுகியின் பிரீமியம் செடான் சியாஸ் (Ciaz) கார் மாடல்கள் ரூ.15,000 பஎக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ .10,000 அப் ஃப்ரென்ட் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் Ciaz-ன் XL6 வேரியன்ட் மாடல் காருக்கு ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.

Arena ஷோரூம் ஆஃபர்கள்:

* மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட் ( Swift ) ரகத்தின் அனைத்து மாடல்களுக்கும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .10,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

* மாருதி சுசுகியின் வேகன் ஆர் மாடல் (Wagon R model) ரூ .15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .8,000 கேஷ் டிஸ்கவுன்ட்டில் கிடைக்கிறது. இதே மாடலின் சி.என்.ஜி பதிப்புகளுக்கு (CNG versions) ரூ.5,000 கூடுதல் கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

ஆக்டிவா 6ஜி-யை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ள ஹோண்டா!


* மாருதி சுசுகியின் என்ட்ரி லெவல் ஈகோ மாடல் (Eeco model) ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் ஆகியவற்றை கொண்டுள்ளதாக carwale.com தெரிவித்துள்ளது.

* ஹேட்ச்பேக்கின் LXi ரூ.20,000 கூடுதல் கேஷ் டிஸ்கவுன்ட்டுடன் கிடைக்கிறது. பிரபலமான Vitara Brezza-வின் ZXI+ and ZXI வேரியன்ட்ஸ் ரூ.20,000 கேஷ் டிஸ்கவுன்ட்டுடனும், VXI மற்றும் LXI பதிப்புகள் ரூ.10,000 டிஸ்கவுன்ட்டுடனும் விற்கப்பட்டு வருகிறது.
Published by:Arun
First published: