• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மார்ச் மாதம் முழுவதும் நீங்கள் வாங்கும் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சூப்பர் ஆஃபர்கள் அறிவிப்பு!

மார்ச் மாதம் முழுவதும் நீங்கள் வாங்கும் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சூப்பர் ஆஃபர்கள் அறிவிப்பு!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

மாருதி காரை வாங்க விரும்பும் கார் பிரியர்கள் அவற்றிற்கு நிறுவனம் என்னமாதிரியான சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமானாக மாருதி சுசுகி, அதன் கார் மடல்களுக்கு பல பெரிய தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது நுழைவு நிலை ஆல்டோவிலிருந்து (Alto) விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) வரை இந்த மார்ச் மாதம் நீங்கள் வாங்கும் வாகனங்களுக்கு சூப்பர் ஆபர்களை பெறலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

    இருப்பினும், எர்டிகா (Ertiga) மாடலுக்கு மட்டும் எந்தவிதமான தள்ளுபடியும் வழங்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனங்களின் தேவை மற்றும் விற்பனையை அதிகரிப்பதே இந்த சலுகையின் பின்னணியில் உள்ள முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தள்ளுபடிகள் ஒவ்வொரு நகரத்திற்கும் வேறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாருதி காரை வாங்க விரும்பும் கார் பிரியர்கள் அவற்றிற்கு நிறுவனம் என்னமாதிரியான சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

    மாருதி எஸ்-பிரஸ்ஸோ (Maruti S-Presso): இந்த மாடல் மொத்தம் ரூ.52,000 வரை தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் ரூ.20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும். இது 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டி விருப்பத்துடன் பொருத்தப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

    மாருதி சுசுகி செலெரியோ (Maruti Suzuki Celerio): இந்த காரை வாங்குபவர்களுக்கு ரூ.47,000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதில், ரூ.20,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும். செலெரியோவில் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் ATM கியர்பாக்ஸ் விருப்பங்கள் ஆகியவை உள்ளன. இது S-Pressoவைப் போல பேக்டரி பிட் CNG விருப்பத்துடன் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி ஆல்டோ (Maruti Suzuki Alto): நிறுவனத்தின் நுழைவு நிலை மாடலான ஆல்டோ ரூ.42,000 மதிப்புள்ள சலுகைகளுடன் கிடைக்கிறது. மார்ச் மாதத்தில் இதனை வாங்குவோர் ரொக்க தள்ளுபடி மற்றும் பரிமாற்ற போனஸ் என தலா ரூ.15,000 சலுகைகள் பெறுவார்கள். இந்த கார் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மார்ச் மாதத்தில் இந்த மாடலை வாங்குவோர் ரூ.20,000 பரிமாற்ற நன்மைகளையும், ரூ.10,000 ரொக்க தள்ளுபடியையும் பெறலாம்.

    மாருதி சுசுகி ஈகோ (Maruti Suzuki Eeco): சுமார் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 பரிமாற்ற போனஸ் உள்பட மொத்தமாக ரூ.37,000 தள்ளுபடி விலையில் இந்த மாடலை நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza): இந்த கார் 105 ஹெச்பி, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் நீங்கள் இந்த காரை வாங்கினால் ரூ .10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ .20,000 பரிவர்த்தனை போனஸ் உள்பட மொத்தமாக ரூ.35,000 வரை தள்ளுபடியை பெறலாம்.

    மாருதி சுசுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்த காருக்கு நீங்கள் ரூ.8,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.20,000 பரிமாற்ற போனஸ் என மொத்தம் ரூ.35,000 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. இது நாட்டின் மிகவும் எரிபொருள் திறன் கொண்ட பெட்ரோல் கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    Also read... மார்ச் மாதத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ நீங்கள் வாங்கவேண்டிய நல்ல நாட்கள், நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R): இந்த மாடல் இரண்டு எகனாமிக்கள் பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. அவை 68 ஹெச்பி, 1.0 லிட்டர் யூனிட் மற்றும் 83 ஹெச்பி, 1.2 லிட்டர் யூனிட் ஆகும். இவை இரண்டும் மேனுவல் மற்றும் ATM கியர்பாக்ஸ் விருப்பங்களைப் பெறுகின்றன. இந்த மாடலை வாங்குவோருக்கு ரூ.30,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.15,000 பரிமாற்ற போனஸ் உள்பட ரூ.30,000 -திற்கான தள்ளுபடிகள் கிடைக்கும்.

    மாருதி சுசுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பலேனோவின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதில், ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ .10,000 பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 ஆகியவை அடங்கும். இருப்பினும், சிக்மா வேரியண்ட்டிற்கு ரூ.5,000 கூடுதல் ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது.

    மாருதி சுசுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): இந்த மாடல் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: