• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார்களுக்கு Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள்...

கார்களுக்கு Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள்...

மாருதி கார்

மாருதி கார்

ஆஃபர்கள் ஆல்டோ முதல் ஸ்விஃப்ட் மற்றும் ஈகோ (Eeco ) வரையிலான பல கார்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • Share this:
மாருதி சுசுகி நிறுவனம் நடப்பு மாதமான ஜூலை 2021-ல் தங்களது நிறுவனத்தின் கார்களை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக சில லாபகரமான டீல்களை வழங்கி வருகிறது. நீங்கள் இந்த மாதம் புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருந்தால், தள்ளுபடி போன்ற சில ஆஃபர்களை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த மாதத்திற்கான மாருதி சுசுகி நிறுவனத்தின் சலுகைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா நெருக்கடி நீடிக்கும் சூழலில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை கடந்த மாதம் ஒரு வலுவான விற்பனை மீட்சியைப் பதிவு செய்துள்ளது.

எனவே வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக மாருதி சுசுகி நிறுவனம் அதன் சில மாடல்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ஆஃபர்களின் ஒரு பகுதியாக கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது மாருதி சுசுகி. இந்த ஆஃபர்கள் ஆல்டோ முதல் ஸ்விஃப்ட் மற்றும் ஈகோ (Eeco ) வரையிலான பல கார்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எர்டிகா மாடல் காரின் விலையில் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாருதி ஆல்டோ:

நாடு முழுவதும் மிகவும் பிரபலமான சிறிய கார்களில் மாருதி ஆல்டோவும் ஒன்றாகும். இந்த காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் என்ஜின் மாடல்களுக்கு ரூ.25,000 மற்றும் CNG என்ஜின் மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் இருக்கிறது.

மாருதி செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ்:

மாருதி செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய இரண்டு கார்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த 2 கார்களுக்கும் கேஷ் டிஸ்கவுன்ட் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

மாருதி டிசையர்:

5 சீட்கள் கொண்ட இந்த செடான் ரக காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் உள்ளிட்ட ஆஃபர்களை அறிவித்து உள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.

மாருதி ஈகோ:

மாருதி சுசுகியின் என்ட்ரி லெவல் ஈகோ ரக மினி வேனுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் அறிவித்து உள்ளது மாருதி சுசுகி. மேலும் இந்த வாகனத்திற்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ:

இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் காருக்கு ரூ.25,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படும். சி.என்.ஜி மாடல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ ரக காருக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் அளிக்கப்படுகிறது. இந்த ஆஃபர்களை தவிர, ரூ .15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

மாருதி ஸ்விஃப்ட்:

மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டுடன் கிடைக்கிறது. காரின் LXI மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ZXI மற்றும் ZXI+ வேரியண்ட்களில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு கேஷ் டிஸ்கவுன்ட்டாக ரூ.30,000 வழங்கப்படுகிறது.

Also read... Tesla: டெஸ்லாவை இழுக்க குஜராத் மும்முரம் - 1000 ஏக்கர் வழங்க தயார் என அறிவிப்பு!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா:

இந்த காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்-ஆர்:

மாருதி வேகன்-ஆர் பெட்ரோல் என்ஜின் வாகனத்திற்கு ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட், CNG என்ஜின் மாடல்களுக்கு ரூ.5,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இது தவிர கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.3,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000 உள்ளிட்ட சலுகைகள் இருக்கின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: