• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள்... டாப் 10 பட்டியலில் 8 மாருதி சுசூகி கார்கள்..!

இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள்... டாப் 10 பட்டியலில் 8 மாருதி சுசூகி கார்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

S-Presso காரின் விலை 3.69 லட்சம் முதல் 4.94 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய ஆட்டோமொபைல் துறை 11 மாத கால தொடர் வீழ்ச்சிக்குப் பின் தற்போது மீண்டும் மெதுவாக வளர்ந்து வருகிறது.

இந்த விழாக்காலத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை கண்ட கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசூகி, வோக்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் முன்னனியில் உள்ளன. கடந்த ஆண்டைவிட மாருதி சுசூகி நிறுவனம் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 2.4 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களுள் 8 இடத்தை மாருதி சுசூகியின் கார்கள் பெற்றுள்ளன.

மாருதியின் டிசைர், சிஃப்ட், ஆல்டோ, பலேனோ, வேகன்ஆர், எஸ்-ப்ரெஸ்சோ, ப்ரெஸ்சா மற்றும் ஈகோ ஆகிய கார்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன. மாருதியின் S-Presso மினி எஸ்யூவி ரக கார் மட்டும் அறிமுகமான ஒரே மாதத்தில் 10,634 கார்களை விற்பனை செய்துள்ளது. S-Presso காரின் விலை 3.69 லட்சம் முதல் 4.94 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆல்டோ காரில் இருப்பது போன்றே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5,500 rpm-க்கு 67-bhp திறன் வெளியீடு கொண்டுள்ளது . டார்க் வெளியீடு 90 Nm ஆக உள்ளது. BS6 ரகம், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோற்ற வடிவமைப்பு சிஃப்ட், டிசைர், வேகன்ஆர் கார்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத் தோற்றம் கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதியின் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும் பார்க்க: அக்டோபர் மாத விற்பனையில் முதலிடத்தில் ஹூண்டாய் - டாப் கார் எது..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: