இந்தியாவில் பயணிகள் கார் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் இதுவரை கார் விற்பனை நடைபெறுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்ட்டோ அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. 2000 ல் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி ஆல்ட்டோ கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கார் விற்பனையில் சிறந்து விளங்கியதோடு, உள்நாட்டு சந்தையில் 40 லட்சம் யூனிட்கள் விற்பனையில் முதலிடம் பிடித்த கார் இது தான்.
இந்நிலையில் புதிய எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் மைலேஜ் அதிகரிப்பு போன்ற மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் தலைமுறை ஆல்ட்டோ காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்யவுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியன்று ஆல்ட்டோவின் புதிய பதிப்பை வெளியிட மாருதி சுசூகி முடிவு செய்துள்ள நிலையில், இதன் அம்சங்கள் என்ன.? என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Maruti Suzuki Alto 2022 ன் எதிர்ப்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:
மாருதி சுசூகி ஆல்ட்டோ 2022 ல் இண்ட்டீரியரைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேவுடன் கூடிய ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வரலாம். காரின் உள்ளிருந்து கொண்டே சைட் வியூவ் கண்ணாடிகளை (electrically foldable and adjustable ORVM) அட்ஜஸ்ட் செய்யலாம். இதோடு டிஜிட்டல் MID போன்ற அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் கிடைக்கப்பெறும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் கிடைக்கும் ஆல்ட்டோவை போல EBD வுடன் கூடிய ABS டிரைவர் சைட் மற்றும் பாசஞ்சர் சைட் ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எல்லா வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாகவே வரக்கூடும். புதிய கே10 இன்ஜின் 66 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் 8 என்எம் டார்க்கை மாருதி சுசூகி ஆல்ட்டோ 2022 வழங்குகிறது. என்ஜின்கள் ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டுடன் இணைக்கப்பட்டிருக்கலாம்
Also Read : Pay-as-you-drive வாகன இன்சூரன்ஸ் திட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன.?
புதிய மாருதி ஆல்டோ கார் பார்க்கிங் சென்சார், டூயல் ஏர்பேக்குகள், கேமரா, அதிவேக எச்சரிக்கை, சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் குழந்தை இருக்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக வரக்கூடும். புதிய ஆல்டோவின் நீளம் 3,530 மிமீ, அகலம் 1,490 மிமீ மற்றும் உயரம் 1,520 மிமீ இருக்கலாம்.
Also Read : கார் வாங்க நிதியுதவி - டாடா மோட்டார்ஸ் உடன் இணைகிறது இந்தியன் வங்கி.!
புதிய ஆல்ட்டோ 2022 விலையைப்பொறுத்தவரை ஆரம்ப விலை ரூ. 4 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் இருக்கலாம். இதன் சென்னை ஆன்ட்ரோட் விலை ரூ. 4.8 லட்சமாக விற்பனை செய்யப்படும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. இது போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளதோடு, பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்வதால் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் புதிய ஆல்ட்டோ 2022 யை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.