• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா-வின் அம்சங்களை வெளியிட்ட மாருதி சுசுகி!!

நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா-வின் அம்சங்களை வெளியிட்ட மாருதி சுசுகி!!

நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா

நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா

இது பெட்ரோலிலிருந்து CNG-க்கு எரிபொருளை எளிதாக மாற்ற அனுமதிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, மாருதி சுசுகி நெக்ஸ்ட்-ஜென் எர்டிகாவின் தொழில்நுட்ப சிறப்பம்சம் அதன் செயல்திறனைத் தாண்டி நீண்டுள்ளது.

  • Share this:
வளர்த்து வரும் ஆட்டோமொபைல் துறை தங்களது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் புது தொழில்நுட்பம் அடங்கிய பலவிதமான புதிய பிராண்ட் கார்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மாருதி சுசுகி அடுத்த தலைமுறை எர்டிகா காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பல்நோக்கு வாகனம் ஒரு ஸ்டைல் உணர்வுள்ள தலைமுறையின் சுவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற கட்டமைப்புகள் முதல் உட்புறம் வரை நெக்ஸ்ட்-ஜென் எர்டிகாவின் ஒவ்வொரு அம்சமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மாருதி சுசுகி நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா உகந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. அதன் எஞ்சின் முதல் அதன் கப்-ஹோல்டர் வரை ஒவ்வொரு பாகங்களும் அதன் உரிமையாளருக்கும் அதிகபட்ச பயன்பாட்டை வழங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா


K -சீரிஸ் பெட்ரோல் எஞ்சின்

மாருதி சுசுகி நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா புதிய K15 பெட்ரோல் எஞ்சினால் இயக்கப்படுகிறது. இதன் குறிப்பிடத்தக்க செயல்திறன் ஓட்டுனருக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் ஆட்டோமொபைல்களுக்கான சமீபத்திய BS-6 சுற்றுச்சூழல் தரத்தை அனைத்து வகைகளிலும் பூர்த்தி செய்கிறது. அதேபோல மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரைவிங் ஆகிய இரண்டிற்கும் இணங்குகிறது.

எஞ்சினில் கட்டமைக்கப்பட்ட முற்போக்கான ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் அதன் உரிமையாளர்களுக்கு ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப், பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன் மற்றும் டார்க் அஸ்சிஸ்ட் போன்ற கூடுதல் செயல்பாடுகளை வழங்க அனுமதிக்கிறது. மேலும் நெக்ஸ்ட் ஜென் எர்டிகாவும் S-CNG மாறுபாட்டில் வருகிறது. இன்டெலிஜென்ஸ் இன்ஜெக்ஷ்ன சிஸ்டம் மற்றும் டூயல் இன்டிபெண்டண்ட் ECUs பொருத்தப்பட்ட, K15 பெட்ரோல் எஞ்சினின் S-CNG வெர்சன் அனைத்து நிலப்பரப்புகளிலும் நிலையான செயல்திறனை உறுதி செய்கிறது. மேலும் ஆட்டோ-பியூயல் சுவிட்ச் மூலம் வாகனம் ஓட்டுவது மிகவும் வசதியானது.

நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா


ஏனெனில் இது பெட்ரோலிலிருந்து CNG-க்கு எரிபொருளை எளிதாக மாற்ற அனுமதிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, மாருதி சுசுகி நெக்ஸ்ட்-ஜென் எர்டிகாவின் தொழில்நுட்ப சிறப்பம்சம் அதன் செயல்திறனைத் தாண்டி நீண்டுள்ளது. ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்த, காரின் தொடர்புடைய புள்ளிகளில் உயர்-இழுவிசை எஃகு பயன்படுத்தும் ஒரு திடமான ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபார்மில் MPV கட்டப்பட்டுள்ளது. இது கார் விபத்துக்குள்ளானால் அதன் ஆற்றல் திறம்பட உறிஞ்சப்படுவதையும் சிதறச் செய்வதையும் உறுதி செய்கிறது.

இதுதவிர ஹை-ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், மற்றும் நெக்ஸ்ட்-ஜென் எர்டிகாவில் இருக்கும் ப்ரீ-டென்ஷனர் ஃபோர்ஸ் லிமிட்டர்களுடன் ஃப்ரண்ட் சீட் பெல்ட்கள் ஆகியவற்றிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கான மாருதி சுசுகியின் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. நெக்ஸ்ட்-ஜென் எர்டிகா ஒரு மல்டி-இன்ஃபர்மேஷன் கலர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது கார்களின் முக்கிய தகவல்களை ஒரே பார்வையில் கண்காணிக்க உதவுகிறது. இந்த ஹை-டெபனிசன் TFT திரை, சராசரி எரிபொருள் நுகர்வு, ஓட்டுநர் வீச்சு, கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், பவர் மற்றும் டார்க் டிஸ்பிலே, மற்றும் ஓட்டுனரின் வசதிக்காக ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் ஆகியவற்றை தெளிவாகக் காட்டுகிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: