புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 2022 இந்தியச் சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த பிராண்டின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் தற்போது முன்கூடிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 2022 கார் மாடல்களை இந்தியச் சந்தையில் காட்சிப்படுத்தி உள்ளதன் மூலம், மிட்-சைஸ் SUV செக்மென்ட்டில் நிறுவனம் நுழைகிறது. புதிய Maruti Suzuki Grand Vitara எஸ்யூவி-க்களின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய 2022 கிராண்ட் விட்டாராவின் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் வேரியன்ட்கள் வாரியான அம்ச விவரங்கள் உள்ளன. அதன்படி புதிய 2022 கிராண்ட் விட்டாரா கீழ்க்காணும் 6 வேரியன்ட்களில் வெளியாக உள்ளது. Sigma, Delta, Zeta, Alpha, Zeta+ மற்றும் Alpha+. ஸ்மார்ட் ஹைப்ரிட் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பாவில் வழங்கப்படும் அதே சமயம் இன்டெலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைப்ரிட் ஜீட்டா+ மற்றும் ஆல்பா+ ஆகியவற்றில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பிராண்டின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் தற்போது ப்ரீ-ஆர்டர்களுக்கு கிடைக்கிறது.
Also Read:ஸ்கார்பியோ எஸ்யூவி மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - அசத்தும் மஹிந்திரா.!
மேலும் புதிய 2022 கிராண்ட் விட்டாரா நாட்டிலேயே மிகவும் எரிபொருள் திறன் கொண்ட எஸ்யூவி என்ற பெயரை பெறுகிறது. இதன் உற்பத்தி ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மாருதி சுசுகி உறுதி செய்துள்ளதால், ஒரு பண்டிகை-கால வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மிட்-எஸ்யூவியை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம், வாங்குவதில் முடிவெடுக்க உதவும் வகையில், ஒவ்வொரு வேரியன்டில் கிடைக்க உள்ள அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.
1. சிக்மா வேரியன்ட் (Sigma):
- எலெக்ட்ரிக்கலி அட்ஐஸ்ட்டபிள் விங் மிரர்ஸ்
- ஸ்ட்டியரிங் மவுன்ட்டட் கன்ட்ரோல்ஸ்
- டூயல் ஏர் பேக்ஸ்
- ஏபிஎஸ் வித் இபிடி
- ரியர் பார்க்கிங் சென்ஸார்ஸ்
- LED DRL-களுடன் கூடிய ஹாலோஜன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்
- ரியர் ஸ்பாய்லர்
- வீல் கவர்களுடன் கூடிய 17-இன்ச் ஸ்டீல் வீல்ஸ்
- ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்
- டூயல் -டோன் பிளாக்-பிரவுன் இன்டீரியர்
- 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளேவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- கீலெஸ் என்ட்ரி அன்ட் கோ
- ஆட்டோ ஏர் கண்டிஷனிங்
- ரியர் ஏசி வென்ட்ஸ்
2. டெல்டா வேரியன்ட் (1.5 பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் MT/AT):
மேலே இருக்கும் சிக்மா வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் சேர்த்துச் கூடுதலாக இந்த வேரியன்ட்டில் இருக்கும் அம்சங்கள் கீழே..
- சுசுகி கனெக்ட் கனக்டட் கார் அம்சங்கள்
- குரூஸ் கன்ட்ரோல்
- ரியர் ஃபாஸ்ட் சார்ஜிங் USB போர்ட்ஸ்
- பேடல் ஷிஃப்டர்ஸ் (AT மட்டும்)
- ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்
- 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
- ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
- 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்
3. ஜீட்டா வேரியன்ட் (1.5 மைல்ட்-ஹைபிரிட் MT/AT பெட்ரோல், AWD in MT only)
மேலே இருக்கும் டெல்டா வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் சேர்த்துச் கூடுதலாக இந்த வேரியன்ட்டில் இருக்கும் அம்சங்கள் கீழே..
- ஃபாலோ-மீ-ஹோம் ஃபங்க்ஷன் கொண்ட ஆட்டோ LED ஹெட்லேம்ப்ஸ்
- ஆட்டோ ஃபோல்டிங் விங் மிரர்ஸ்
- 9.0-இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்
- Arkamys சவுண்ட் சிஸ்டம்
- ரியர் விண்ட் ஸ்கிரீன் வைப்பர் அண்ட் வாஷர்
- சாஃப்ட் டச் டேஷ்போர்டு அண்ட் டோர் இன்ஸெர்ட்ஸ்
- ஆம்பியன்ட் டோர் லைட்டிங்
- குரோம் விண்டோ லைன் கார்னிஷ்
- சைட் அன்ட் கர்டெயின் ஏர்பேக்ஸ்
- 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்ஸ்
Also Read:3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.!
4. ஜீட்டா+ வேரியன்ட் (1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் e-CVT)
மேலே இருக்கும் ஜீட்டா வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் சேர்த்து கூடுதலாக இந்த வேரியன்ட்டில் இருக்கும் அம்சங்கள் கீழே..
- ஆல்-பிளாக் இன்டீரியர் வித் கோல்ட் ஆக்சென்ட்ஸ்
- டேஷ்போர்டு ஆம்பியன்ட் லைட்டிங்
- 7.0-இன்ச் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- ஹெட்-அப் டிஸ்பிளே
- டூயல் டோன் எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன்ஸ்
- சில்வர் ரூஃப் ரெயில்ஸ்
- வயர்லெஸ் சார்ஜர்
5. ஆல்பா வேரியன்ட் (1.5 பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் MT/AT, MT இன் AWD மட்டும்)
மேலே இருக்கும் ஜீட்டா+ வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் சேர்த்துச் கூடுதலாக இந்த வேரியன்ட்டில் இருக்கும் அம்சங்கள் கீழே..
- லெதரெட் ஸ்டீயரிங் வீல்
- பனோரமிக் சன்ரூஃப்
- டிரைவ் மோட் செலெக்டர் (AWD வேரியன்ட்டில் மட்டும்)
- டூயல் டோன் எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன்கள்
- பிளாக் ரூஃப் ரெயில்ஸ்
- 360 டிகிரி கேமரா
- ஹில் டெசன்ட் கன்ட்ரோல்
6. ஆல்பா+ வேரியன்ட் (1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் e-CVT):
மேலே இருக்கும் ஆல்பா வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களுடன் சேர்த்துச் கூடுதலாக இந்த வேரியன்ட்டில் இருக்கும் அம்சங்கள் கீழே..
- படில் லேம்ப்ஸ்
- வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ்
- அப்கிரேடட் சவுண்ட் சிஸ்டம்
- லெதரெட் ஸ்டீயரிங் வீல்
- டயர் பிரஷர் மானிட்டர்
- 360 டிகிரி கேமரா
- பிளாக் லெதரெட் சீட்ஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Cars, Launch, Maruti, Maruti Suzuki