ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இனி மாருதி சுசுகியில் கார் வாங்குவது எளிது.. அறிமுகமானது Online Smart Finance திட்டம்!

இனி மாருதி சுசுகியில் கார் வாங்குவது எளிது.. அறிமுகமானது Online Smart Finance திட்டம்!

மாருதி சுசுகி நிறுவனம்!

மாருதி சுசுகி நிறுவனம்!

மல்டி ஃபைனான்சியர் எண்ட்-டு-எண்ட் ஆன்லைன் பரிமாற்றதை அறிமுகப்படுத்திய முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுசுகி உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் " ஆன்லைன் ஸ்மார்ட் ஃபைனான்ஸ்" திட்டத்தை தனது வடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கார் வாங்குவோர் தங்கள் கார்களுக்கு ஆன்லைனில் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் நிதியளிக்க முடியும். புதிய மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் அரெனா மற்றும் நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, இத்திட்டம் இந்தியா முழுதும் கிடைக்கிறது. புதிய சேவைக்கான அணுகலை அந்தந்த டீலர்ஷிப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக பெறலாம். இதன் மூலம் மல்டி ஃபைனான்சியர் எண்ட்-டு-எண்ட் ஆன்லைன் பரிமாற்றதை அறிமுகப்படுத்திய முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுசுகி உள்ளது.

மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் 2020 டிசம்பரில் குறிப்பிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தற்போது வரை 25 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் இந்தியா முழுதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!  

மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் என்பது ஒரு ஒன்ஸ்டாப் ஆன்லைன் நிதி போர்ட்டல் ஆகும், இது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கார் வாங்கும் அனுபவத்தை ஷேர் செய்ய அனுமதிக்கிறது. மற்றும் சரியான நிதி கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது, கார் லோன் குறித்து தெரிந்து கொள்வது, ஆன்லைனில் லோன் வாங்குவது போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி உங்கள் பழைய காரை இதில் எக்சேஞ்சும் செய்து கொள்ள எளிதாக பழைய காரின் மதிப்பை அறிந்துக் கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தனக்கான வங்கியை தானே தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக வங்கிகளுடன் மாருதி சுசுகி தற்போது கூட்டணி வைக்கத் தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 14 நிதி நிறுவனங்களுடன் மாருதி கூட்டணி வைத்திருக்கின்றது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கரூர் வைஸ்யா வங்கி, சோழமண்டலம் ஃபைனான்ஸ், ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மஹிந்திரா ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா ப்ரைம், சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிபி ஃபைனான்சியல் சர்வீஸ் ஆகிய வங்கிகளுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளது. இந்த பட்டியலில் மேலும் சில வங்கிகளும் வரும் காலங்களில் இணைய வாய்ப்புகள் உள்ளது.

Also read:  ஏர்டெல், ஜியோ, Vi வழங்கும் ப்ரீபெயிட் திட்டங்கள்!

இந்த திட்டம் குறித்து விளக்கிய மாருதி சுசுகி இந்தியாவின் மூத்த நிர்வாக இயக்குநர் திரு. சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “ஒரு கார் டீலர்ஷிப்பில் நுழைவதற்கு முன்பே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தங்களுக்கு விரும்பமான கார்கள் குறித்த விவரங்களை பார்க்கின்றனர். மாறிவரும் வாடிக்கையாளர் நடத்தையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமான மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த, பல அம்சங்களை இதில் சேர்த்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாருதி சுசுகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ் தளத்தை தற்போது வரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். 40,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் இதுகுறித்த விவரங்களை டவுன்லோடு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு காரணத்திற்காகவும் வாடிக்கையாளர்கள் ஷோரூமையோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அணுக வேண்டிய நிலை இருக்காது. தற்போதைய கோவிட் பரவல் காலத்தில் இந்த திட்டம் முக்கிய அம்சமாக இருக்கும் என்பதால் தான் இந்திய உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் திட்டத்தை தற்போது தொடங்கியதாக கூறியுள்ளார்.

Published by:Arun
First published:

Tags: Automobile, Maruti, Maruti Suzuki