முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இந்தியாவில் அறிமுகமான புதிய Dzire Tour S - மைலேஜ் கேட்டா மிரண்டு போவீங்க

இந்தியாவில் அறிமுகமான புதிய Dzire Tour S - மைலேஜ் கேட்டா மிரண்டு போவீங்க

மாருதி சுசுகி டிசையர்

மாருதி சுசுகி டிசையர்

Maruti Suzuki Dzire Tour S : மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய டிசையர் வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாருதி சுசுகி இந்தியச் சந்தை புதிதாக அறிமுகமான Dzire Tour S காரை அறிமுகம் செய்துள்ளனர். தொடக்க விலையாக ரூ.6.51 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. கணிசமான புதிய அப்டேட்களுடன் இந்த கார் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான எஞ்சின்களில் இந்தக் கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலை ரூ. 6.51 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

கால் டாக்சி டிரைவர்களுக்கு அதிக லாபம் ஈட்டி தரும் விதமாக இதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பெட்ரோல் எஞ்சின் காரின் விலை ரூ.6.51 லட்சமாகவும், சிஎன்ஜி எஞ்சின் காரின் விலை ரூ. 7.36 லட்சம் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிசையர் டூர் எஸ், வாடகை வாகன பிரிவிற்கான பிரத்யேக தேர்வாகும். கேப் சேவைக்கென்றே பிரத்யேகமாக இந்த மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. டாக்சி வாகன ஓட்டுநர்களுக்கு அதிக லாபத்தைத் தரும் விதமாகக் கணிசமான மாற்றங்கள் இதில் செய்யப்பட்டு உள்ளன.

இதன் சிஎன்ஜி எஞ்சின் ஒரு கிலோவிற்கு 32.12 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இது தற்போது விற்பனையில் இருக்கும் சிஎன்ஜி வெர்ஷனைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிக லாபத்திற்கு நிச்சயம் புதிய டிசையர் டூர் பெரும் உதவியாக இருக்கும். இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 23.15 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

மேலும், இந்த காரின் முகப்பு பகுதியும் கணிசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் டூர் எஸ் பேட்ஜ் ஆகியவற்றின் ஸ்டைல்களும் லேசாக ரிவைஸ் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் டிசையர் டூர் எஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆர்க்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் ஆகிய நிறங்களில் இந்தக் கார்கள் கிடைக்கும்.

புதிய அம்சமாக இந்த காரில் டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல், மேனுவல் ஏர் கன்டிஷனிங் பொல்லன் ஃபில்டருடனும் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர்கள் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டூர் லாக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் டிசையர் டூர் எஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

Also Read : விரைவில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் இ-பைக் - விலை எவ்வளவு தெரியுமா?

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன், பிரேக் அசிஸ்ட், ஸ்பீடு லிமிட்டிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரட்டை ஏர் பேக்குகள் என எக்கசக்க அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்தக் கார் தொழில் ரீதியான லாபகரமான வாகனப் பயன்பாட்டுக்கு மிகப் பொருத்தமான காராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

செய்தியாளர் எல். ரொசாரியோ ராய்

First published:

Tags: Car, Cars, Maruti Suzuki