மகிந்திரா தார்-க்கு சவாலாக மாருதி சுசுகி ஜிம்னி - லீக்கான தகவல்!

மாருதி சுசுகி ஜிம்னி

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் காம்பாக்ட் எஸ்.யூ.வி மாடலான மாருதி சுசுகி ஜிம்னி கார் அறிமுகம் செய்யப்பட்டது

  • Share this:
இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி  அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி சுசுகி ஜிம்னி எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ஆட்டோமொபைல்துறையில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் காம்பாக்ட் எஸ்.யூ.வி மாடலான இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான வதந்திகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. ICN தகவலின்படி, ஜிம்னி எஸ்.யூ.வி கார் அடுத்த ஆண்டு ஜூன் மாத த்திற்குள் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது, 2022 ஜூன் மாதம் பிறபகுதியில் கார் விற்பனை சந்தையில் தடம் பதிக்க வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி எஸ்.யூ.வியில் 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் கொண்ட வெர்சன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 5 கதவுகள் கொண்ட ஜிம்னி காம்பாக்ட் எஸ்.யூ.வி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் 3 கதவுகள் கொண்ட ஜிம்னியை அறிமுகப்படுத்துவதில் விருப்பம் இல்லை என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களை இந்த வெர்சன் கார்கள் ஈர்க்காது என அந்த நிறுவனம் சந்தேகம் தெரிவித்திருந்தது. ஆனால், மகேந்திரா நிறுவனத்தின் தார் கார்கள் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மாருதி சுசூகி தங்களது முடிவை மறுபரிசீலனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல் ஜிம்னியின் அறிமுகம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். பொதுவான வாடிக்கையாளர்கள் மாருதி சுசுகி ஜிம்னியை வாங்க விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வெளியாகும் அப்டேட்கள் மற்றும் செய்திகள் ஜிம்னியின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஆனால், நிறுவனம் தரப்பில் இருந்து ஜிம்னியின் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஜிம்னியின் அறிமுகம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்ரோடு ஜிம்னி எஸ்.யூ.வி மாடல் கார்கள் குஜராத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கொலம்பியா, பெரு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இந்த கார்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்கு முக்கிய காரணம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3 கதவுகள் கொண்ட எஸ்.யூ.விகள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதேநேரத்தில், 5 கதவுகள் கொண்ட ஜிம்னி மாடல் கார்களின் உருவாக்கமும் நடைபெற்று வருகிறது. அந்த கார்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.

மாருதி சுசுகி ஜிம்னி 1.5 லிட்டர் அளவுள்ள 4 சிலிண்டர்கள் மற்றும் கே சீரிஸ் வகைகொண்ட பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளன. இது 6000 rpm-ல்,101 bhp -ஐகொடுக்கும். டர்கூயூ 1300 NM, 4000rpm-ஐயும் கொண்டிருக்கும். எஞ்சினைப் பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டர்க்யூ கன்வெர்ட் யூனிட் என இரு வெர்சன்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி ஜிம்னி இந்திய சந்தையில் கால் பதித்தால், மகேந்திரா தார் நிறுவன கார்களின் விற்பனைக்கு சவாலாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published: