• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் மாருதி சுசுகியின் ஜிம்னி - அட்டகாசமான டீசர் வெளியீடு!

இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் மாருதி சுசுகியின் ஜிம்னி - அட்டகாசமான டீசர் வெளியீடு!

மாருதி சுசுகியின் ஜிம்னி

மாருதி சுசுகியின் ஜிம்னி

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எகஸ்போவில் முதன்முறையாக இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்டது.

  • Share this:
மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் மாடலுக்குப் போட்டியாக இந்திய மார்க்கெட்டில், ஜிம்னி காரை மாருதி சுசுகி நிறுவனம் களமிறக்க உள்ளதை அட்டகாசமான டீசர் மூலம் தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகியின் ஜிம்னி எஸ்.யூ.வி மாடல் கார் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டு கொண்டிருந்தது. அவ்வப்போது, இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்கள் அனைத்தும் தகவல்களாகவே சென்ற நிலையில், இந்த முறை உறுதியான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய மார்க்கெட்டில் மாருதி சுசுகியின் ஜிம்னி நிச்சயம் களமிறக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எகஸ்போவில் முதன்முறையாக இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில், ஜிம்னி கார் இந்திய சாலைகளில் பல்வேறு சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டது. இதனால், இந்த முறை ஜிம்னியின் வருகை சாத்தியம் என்றே வாகனப் பிரியர்களின் மத்தியில் ஆர்வம் மேலோங்கியிருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜிம்னியின் அட்டகாசமான டீசரை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெக்ஸா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்னியின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு, அதாவது 2022ம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் ஜிம்னி நுழைய திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலில் 3 கதவுகள் கொண்ட ஜிம்னி சந்தைக்குள் நுழையவிருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 5 கதவுகள் கொண்ட கார்களாக வரும் என கூறப்பட்டது. இருப்பினும், 3 கதவுகள் கொண்ட ஜிம்னியா அல்லது 5 கதவுகள் கொண்ட ஜிம்னியா என்பது இன்னும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by NEXA (@nexaexperience)






புதியதாக சந்தைக்குள் நுழைய இருக்கும் ஜிம்னி, அட்டகாசமான டிசைன் மற்றும் பட்ஜெட் விலை, ஆஃப்ரோடு தகவமைப்புகள், சிறந்த தொழில்நுட்பங்கள் என அனைத்தும் இதில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஆஃப்ரோடு பிரியர்களிடம் இந்தக் கார் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் அதே வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகியின் ஜிம்னி கார், குஜராத் மாநிலத்தில் உள்ள சுசுகி தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை உள்ளூர் விற்பனைகளுக்கு மட்டுமல்லாமல் கொலம்பியா, பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஜிம்னி காரைப் பொறுத்த வரை, 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே செரீஸ் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.

Also read... 4 வேரியன்ட்களுடன் அறிமுகமானது டாடா பன்ச் – ஆரம்ப விலை 5.49 லட்சம் மட்டுமே!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றக் கூடியது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மகேந்திரா நிறுவனத்தின் தார் கார்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், மகேந்திரா தார் கார்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. அதற்கான போட்டியை சந்தையில் ஏற்படுத்தும் இந்தக் கார், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்ஸ் கூர்காவிற்கும் கடும் சவால் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: