• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • எலெக்ட்ரிக் வாகனத்துக்கு வாய்ப்பில்லை... வேதனையில் மாருதி சுசூகி..!

எலெக்ட்ரிக் வாகனத்துக்கு வாய்ப்பில்லை... வேதனையில் மாருதி சுசூகி..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இதற்கான முக்கிய காரணமே போதிய அரசு உதவு இல்லாததுதான் என்கிறது மாருதி சுசூகி.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, தற்போதைய சூழலில் தங்களால் எலெக்ட்ரிக் வாகன விற்பனையைக் கொண்டு வர முடியாது என வேதனையுடன் அறிவித்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்து தற்போது சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், போதிய கட்டமைப்பு, அரசு உதவி இல்லாததால் எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர தற்போதைய சூழலில் வாய்ப்பே இல்லை என்று அறிவித்துள்ளது.

வேகன் ஆர் காரை எலெக்ட்ரிக் வாகனமாக அப்டேட் செய்து வருகிற 2020-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வருவோம் என மாருதி முன்னர் அறிவித்திருந்தது. ஆனால், அடுத்த ஓராண்டுக்கு பொது பயன்பாட்டுக்கு இந்தக் கார் வராது எனத் தெரிகிறது. இதற்கான முக்கிய காரணமே போதிய அரசு உதவு இல்லாததுதான் என்கிறது மாருதி சுசூகி.

இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியத் தலைவர் பார்கவா கூறுகையில், “எங்களது திட்டத்தின் அடிப்படையில் 2020-ம் ஆண்டு 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். ஆனால், அரசு இதற்கான எவ்வித கட்டமைப்பையும் செய்யவில்லை. வசதிகள் ஏதும் இன்றி வாகனத்தை மட்டும் அதிக விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர் என்ன செய்ய முடியும்? இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் பெருக வேண்டுமானால் இந்தியாவிலேயே யாராவது பேட்டரி தயாரிக்க வேண்டும்” என்றார்.

மேலும் பார்க்க: புதிய வெற்றிக்காக மாருதி சுசூகி உடன் இணையும் டொயோட்டா!

வசூல் வேட்டை நடத்திய பிகில்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: