இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1லட்சத்து 12ஆயிரம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலில் வெளிநாட்டு மாடல் கார்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் மாருதி உத்யோக் என்ற மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம்தான். மாருதி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2003 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்தது. பிறகு ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி நிறுவனத்திற்கு கை மாறியது மாருதி நிறுவனம்.
ஆனாலும், தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் வெற்றிகரமான கார் தயராரிப்பு நிறுவனமாக கார் சந்தையில் கோலோச்சி வருகிறது. அந்த நிறுவனம் தான் கடந்த ஒரு மாதத்தில் 1,12,010 கார்களை விற்பனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத விற்பனையோடு ஒப்பிடும் போது இது குறைவுதான். ஏனென்றால் கடந்த ஆண்டு டிசம்பர் விற்பனை 1,23, 016 கார்கள்.
சுசுகி பெலினோ கார்தான் விற்பனையான கார்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. டிசம்பர் மாதம் மட்டும் 16, 932 பெலினோ கார்கள் விற்பனையாகியுள்ளன. பெலினோ கார்களின் விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள கார் சுசுகி எர்டிகா. டிசம்பர் மாதத்தில் மட்டும் 12, 273 எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறியுள்ளது. மூன்றாம் இடத்தை மாருதி சுசகியின் ஃபேரைட் மாடலான ஸ்விஃப்ட் கார் பிடித்துள்ளது. டிசம்பர் மாதம் மட்டும் 12,061 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.
டிசம்பர் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் வரிசையில் நான்காம் இடத்தை மாருதி சுசுகியின் செடான் டைப் காரானா டிசையர் பிடித்துள்ளது. டிசம்பர் மாதம் மட்டும் 11,997 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது போல் மாருதி சுசுகியின் பிரீசா, இகோ , வேகன் ஆர், ஆல்டோ உள்ளிட்ட கார்களும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.
புதிய வரவான கிராண்ட் விடாராவும் விற்பனையில் சளைக்கவில்லை. டிசம்பர் மாதம் 6,171விடாரா கார்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ரசனைக்கேற்ப, நல்ல மைலேஜூடன், பட்ஜெட் விலையில் கார்களை தயாரித்து மாருதி சுசுகி நிறுவனம் சந்தைப் படுத்தி வருகிறது. அதனால் மாருதி சுசுகி தயாரிப்புகள் இந்திய கார் பிரியர்களின் ஆல்டைம் ஃபேரவரைட்டாக இருக்கிறது.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Maruti Suzuki