• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்திய Maruti Suzuki நிறுவனம் - புதிய விலை விவரம்!

கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்திய Maruti Suzuki நிறுவனம் - புதிய விலை விவரம்!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை மந்தமாகியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki), டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி 18 முதல் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியுள்ளது. CNBC-TV18 வெளியிட்டுள்ள செய்தியில், Maruti Suzukiயின் சில மாடல்களின் விலையை கார் நிறுவனம் ரூ. 34,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. (எக்ஸ்-ஷோரூம்-டெல்லி). ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்களின் (steel and raw material) விலை கடுமையாக உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாருதியின் கார் ரேஞ்சின் (Maruti's car range) விலை அதன் என்ட்ரி லெவல் சிறிய கார் ஆல்டோவுக்கு (entry-level small car Alto) ரூ. 2.95 லட்சத்தில் தொடங்கி பிரீமியம் ஆறு இருக்கைகள் கொண்ட MPV, XL6 வரை ரூ. 11.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்-டெல்லி) வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Altoவின் விலை முன்பு இருந்ததை விட சுமார் 9,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும், எஸ்பிரெசோவுக்கு (Espresso) சுமார் ரூ. 7,000 கூடுதலாக செலவாகும். இதேபோல், பலேனோ, பிரெஸ்ஸா மற்றும் செலெரியோவிற்கு (Baleno, Brezza and Celerio) முறையே இந்த உயர்வு ரூ .19,400, ரூ .10,000 மற்றும் ரூ .14,400 ஆக இருக்கும். 

வேகன் ஆர் (Wagon R) காரை நீங்கள் வாங்க நினைத்தால் நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர்கள் ரூ .2,500 முதல் ரூ .18,200 வரை கூடுதலாக ஷெல் அவுட் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு (coronavirus pandemic) மத்தியில் Maruti நிறுவனம் கார்களை எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று ஒருபக்கம் போராடி வரும் நிலையில் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலைகளை அதிகரித்திருப்பது உண்மையில் நிறுவனத்தின் கஷ்டகாலத்தை தான் காட்டுகிறது. நிறுவனத்தின் இந்த விலை உயர்வு கார் வாங்க நினைக்கும் கஸ்டமர்களுக்கு சில தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே Maruthi, 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்தியது, இருந்தும் இப்போதுள்ள இந்த விலையேற்றம் மாருதி காரை வாங்க நினைக்கும் கஸ்டமர்களை சற்றே திக்குமுக்காட வைத்துள்ளது. நவம்பர் 2020ல், மாருதி சுசுகி மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் (domestic passenger vehicle sales) 2.4 சதவீதம் சரிவை (1,35,775 யூனிட்கள்) கொண்டிருந்தது. கடந்த 2019ல் இதே காலகட்டத்தில் 1,39,133 யூனிட்கள் சரிவை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி தவிர, கியா, ஹூண்டாய், மஹிந்திரா, ஹோண்டா, ரெனால்ட், ஃபோர்டு, ஸ்கோடா, வோக்ஸ்வாகன், நிசான் மற்றும் டாட்சன் (Kia, Hyundai, Mahindra, Honda, Renault, Ford, Skoda, Volkswagen, Nissan and Datsun) போன்ற சில கார் தயாரிப்பாளர்களும் ஜனவரி 2021 முதல் விலை உயர்வுகளை அறிவித்துள்ளனர்.

Also read... கொரோனா காலத்திலும் நெக்சான் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் விருப்பும் எலெக்ட்ரிக் கார்!

வேரியண்ட்களுக்கேற்ப விலை உயர்வின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

Alto: ரூ .9,000 வரை உயர்ந்துள்ளது

Espresso: ரூ .7,000 வரை உயர்ந்துள்ளது

Baleno: ரூ .19,400 வரை உயர்ந்துள்ளது

WagonR: ரூ .2,500 அதிகரித்து ரூ .18,200 வரை உயர்ந்துள்ளது

Brezza: ரூ .10,000 வரை உயர்ந்துள்ளது

Celerio: ரூ .14,400 வரை உயர்ந்துள்ளது

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலையால் வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை மந்தமாகியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவை ஒவ்வொரு மாதமும் குறைத்து வருகின்றன. பெட்ரொல் - டீசல் விலையேற்றம், உதிரிப் பாகங்கள் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, வாகன எஞ்சின் மாற்ற விதிமுறைகள், எலெக்ட்ரிக் வாகன மாற்றத்துக்கான நெருக்கடி போன்ற காரணிகள் ஆட்டோமொபைல் துறையினரை கடுமையாகப் பாதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல கார் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கலாம். எனவே உங்களுக்கு கார் வாங்க ஆசை இருந்தால் டைம் லேட் பண்ணாமல் கார் வாங்க உடனே முந்துங்கள்!.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: