மாருதி உள்ளிட்ட கார்களின் விலை ஏறியது! இம்மாதம் முதல் அமல்

news18
Updated: August 20, 2018, 7:52 PM IST
மாருதி உள்ளிட்ட கார்களின் விலை ஏறியது! இம்மாதம் முதல் அமல்
மாருதி ஸ்விஃப்ட்
news18
Updated: August 20, 2018, 7:52 PM IST
மாருதி சுஸுகி கார்களின் விலை ₹6,100 வரை ஏற்றப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி விகிதம் உயர்வால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் சிறிய கார்கள் முதல் மிட் சைஸ் செடான் கார் வகைகள் வரை பல கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ₹2.51 லட்சம் விலை மதிப்புள்ள ஆல்டோ 800 முதல் ₹11. 51 லட்சம் மதிப்புள்ள சியாஸ் வரை அடங்கும் (விலை ஏற்றத்திற்கு முன்பு).

கடந்த மாதம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கல்சி, பல பொருளாதார காரணங்களினால் கார்களின் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்நிய செலாவணி விகித உயர்வாலும், எரிபொருள் விலை உயர்வாலும், லாஜிஸ்டிக்ஸ்கான செலவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ். கல்சி தெரிவித்தார்.

மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. மகிந்திரா & மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா கார்ஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், இந்த மாதத்திலிருந்து தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன.
First published: August 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626