Home /News /automobile /

இந்த நிதியாண்டில் 20 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள மாருதி சுசுகி.!

இந்த நிதியாண்டில் 20 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள மாருதி சுசுகி.!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

Maruti Suzuki | செமிகண்டக்டர்ஸ் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுளதாகவும் பார்கவா குறிப்பிட்டு உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நடப்பு நிதியாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், 20 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மாருதியின் தலைவர் ஆர்சி பார்கவா தகவல் தெரிவித்துள்ளார்.

செமிகண்டக்டர்ஸ் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுளதாகவும் பார்கவா குறிப்பிட்டு உள்ளார். வரவிருக்கும் மிட்-ரேஞ்ச் SUV-யான மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா வாகனம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பார்கவா கூறி இருக்கிறார்.

2021-22 நிதியாண்டில், மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 13.4% அதாவது 16.52 லட்சம் யூனிட்கள் என்ற வளர்ச்சியை சந்தித்துள்ளது. கோவிட் தொற்று மற்றும் உலகளாவிய செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை சரிவை கண்டது. எனினும் வருட இறுதியில் நிறுவனத்தின் முன்பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 2.7 லட்சமாக உயர்ந்தது என்றும், உள்நாட்டு சந்தையில் சில வாய்ப்புகளை இழந்ததால் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் சந்தை பங்கு கிட்டத்தட்ட 50 சதவீதத்தில் இருந்து 43.4 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் பார்கவா தகவல் தெரிவித்து உள்ளார்.



இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவுகளின்படி, உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2020-21ல் 27,11,457 ஆக இருந்த நிலையில், 2021-22ல் 30,69,499 ஆக இருந்தது என்றார். நடப்பு நிதி ஆண்டிற்கான விற்பனை கணிப்பு குறித்து கூறியுள்ள ஆர்சி பார்கவா, செமிகண்டக்டர்கள் தங்கு தடையின்றி கிடைப்பது தொடர்பான சூழ்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருவதால் வாகன உற்பத்தி அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க மேலும் பல மேம்படுத்தல்களை செய்து வருகிறது. எங்கள் டீமிடம் 2 மில்லியன் யூனிட்களை எட்ட வேண்டும் என்று நான் அறிவுறுத்தி இருக்கிறேன். இருப்பினும் இதை செய்வது ஒரு சவாலாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.! 

மிட்-சைஸ் எஸ்யூவி-யான கிராண்ட் விட்டாராவை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிறுவனம் அதன் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிப்பதில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், 2 மில்லியன் யூனிட்கள் இலக்கு நிர்ணயிக்க முக்கிய காரணங்களில் கிராண்ட் விட்டாராவும் ஒன்று. ஏனென்றால் இந்த புதிய எஸ்யூவி இலக்கை நோக்கி செல்ல உதவும் என்றும் தெரிவித்தார். மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவை டொயோட்டா தனது கர்நாடக தொழிற்சாலையில் தயாரிக்கும்.



மேலும் வரவிருக்கும் புதிய எஸ்யூவி டொயோட்டாவின் வலிமையான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் என்றும் இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் காராக இந்தியாவில் இது தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிரீமியம் அல்லாத ஹேட்ச்பேக்குகளின் விற்பனையில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட மாருதி சுஸுகியின் SUV போர்ட்ஃபோலியோவை மேம்படுத்துவது அவசியம். SUV துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் தற்போது மாற்றியமைக்கப்பட்ட பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாராவின் உலகளாவிய வெளியீடு மூலம் நிலைமை மிகவும் சிறப்பாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki, Toyota

அடுத்த செய்தி