Home /News /automobile /

ஆல்டோ, வேகன் ஆர் கார்களின் உற்பத்தியை நிறுத்த மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு!

ஆல்டோ, வேகன் ஆர் கார்களின் உற்பத்தியை நிறுத்த மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு!

alto

alto

Maruti Suzuki | நடுத்தர மக்கள் வாங்க கூடிய விலையில்,  சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்வதால் இந்திய மக்களால் அதிகம் விருப்பக்கூடிய நிறுவனமாக உள்ளது.

    இந்தியாவில் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் கார்களை விற்கக்கூடிய அளவுக்கு இந்தியா மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டாக இருந்து வருகிறது. இதில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனம் முன்னிலையில் உள்ளது. ஜப்பானின் சுஸுகி மோட்டார் மற்றும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களைக் கொண்ட நிறுவனங்களாக உள்ளன.

    இதனிடையே மத்திய அரசு விபத்துக்களை தடுக்கும் நோக்கில் நடப்பு ஆண்டில் பல்வேறு கட்டாய சட்டங்களை கொண்டு அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இனி 8 பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் கார்களுக்கு குறைந்தபட்சம் 6 ஏர் பேக் கட்டாயம் என்று புதிய சட்ட வரைவில் கையெழுத்திட்டார். இந்திய சாலைகளில் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்திய சந்தையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய கார் மாடல்களில் ஆறு ஏர்பேக் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம் என்று ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பாளர்கள், பயணிகள் கார்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவது வாகனங்களின் விலையை உயர்த்தும் என்றும், இதனால் நடுத்தர மக்களின் கார் வாங்கும் திறன் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 355,000 சாலை விபத்துகளில் 133,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் சுமார் 13 சதவீதம் பேர் கார் பயணிகள் என்பதை சுட்டிக்காட்டும் மத்திய அரசு, 6 ஹேர்பேக்குகள் சட்ட முன்வடிவை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.



     

    நடுத்தர மக்கள் வாங்க கூடிய விலையில், சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்வதால் இந்திய மக்களால் அதிகம் விருப்பக்கூடிய நிறுவனமாக உள்ளது. குறைவான விலையில் கார்களை விற்பனை செய்த போதும் முன்பக்க பயணிகள் இருக்கை, ஓட்டுநர் ஆகியோருக்கு ஹேர்பேக் வசதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிறிய வகை கார்களில் மேலும் 4 ஹேர்பேக்குகளை சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால், கார்களின் விலை கூடுதலாக 17 ஆயிரத்து 600 ரூபாய் வரை உயரக்கூடும்.

    Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    அதுமட்டுமின்றி, கூடுதல் ஏர்பேக்குகளை பொருத்தக்கூடிய வகையில் காரின் கட்டமைப்பு பொறியியலிலும் நிறுவனங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், விலை அதிகரிக்கக்கூடும். இவ்வளவு மாற்றங்களை மேற்கொண்ட பிறகு சிறிய ரக கார்களை அதிக விலைக்கு விற்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

    Also Read : விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது கார் பாதுகாப்பு ரேட்டிங்.. எப்படி செயல்படும் தெரியுமா.? 

    மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவின் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையில், “இந்தியாவில் ஏற்கனவே கார்களுக்கான சந்தை சுருங்கி வருவதாகவும், இனி கார்களில் 6 ஹேர்பேக்குகள் இருக்க வேண்டியது கட்டாயம் என்ற விதியால் கார்களின் விலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் கார் உற்பத்தி துறை பாதிக்கப்படக்கூடும் ” எனத் தெரிவித்தார்.



     

    மாருதி சுஸுகி ஆல்டோ போன்ற சிறிய கார்களில் 6 ஹேர்பேக்குகளை பொருத்த வேண்டும் என்றால், அதன் வடிவமைப்பை மறுசீரமைப்பு செய்து, கூடுதல் சென்சார்களை இணைக்க வேண்டும். இதனால் காரின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

    Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!

    இந்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் எங்களின் லாபம் சிறிய கார்களை சார்ந்து இருந்தது இல்லை. மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் இருந்து வருகிறது. ஆல்டோ போன்ற மாடல்களை இந்திய சந்தையில் லாபம் இன்றி தான் விற்பனை செய்து வருகிறோம். கார் சந்தையில் இருந்து சிறிய கார்கள் மறைந்தால் இந்திய ஆட்டோமொபைல் துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும் என தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் மத்திய அரசு கொண்டு வர உள்ள 6 ஹேர்பேக் கட்டாயம் என்பது அமலாக்கப்பட்ட பிறகு, ஆல்டோ, வேகன் ஆர் போன்ற சிறிய ரக கார் உற்பத்தியை நிறுத்த நேரிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Maruti Suzuki

    அடுத்த செய்தி