ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்த மாருதி சுசூகி..!

இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்த மாருதி சுசூகி..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் உற்பத்தியை துவக்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் நேரத்தில் மாருதி சுசூகி ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 மில்லியன் யூனிட் என்ற சாதனையை படைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, கடந்த 1983-ஆம் ஆண்டு அதன் குருகிராம் உற்பத்தி ஆலையில் செயல்பட துவங்கியதிலிருந்து, ஒட்டுமொத்த உற்பத்தியில் சாதனை படைத்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

  இந்த 39 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக சமீபத்தில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் இந்தியாவில் பயணிகள் வாகன உற்பத்தியில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே நிறுவனம் என்ற பெருமையையும் மாருதி சுசூகி

  பெற்றுள்ளது. 1980-களின் முற்பகுதியில் நாட்டில் தனது செயல்பாடுகளை தொடங்கிய இந்த நிறுவனத்தின் மாருதி 800 (M800) கார் பல ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

  தொடர்ந்து தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்திய மாருதி சுசூகி தற்போது சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடல் கார்களைகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த மாடல்கள் மாருதி சுசூகியின் குர்கான் மற்றும் மானேசர் பகுதிகளில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த 2 உற்பத்தி ஆலைகளும் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்களுக்கு மேல் உற்பத்தி திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாப் 6 சிஎன்ஜி கார்கள்!

  Read More : ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாப் 6 சிஎன்ஜி கார்கள்!

  இந்தியாவில் உற்பத்தியை துவக்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் நேரத்தில் மாருதி சுசூகி, ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 மில்லியன் யூனிட் என்ற சாதனையை படைத்துள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய இந்த சாதனை குறித்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி (Hisashi Takeuchi) கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவில் 40-வது ஆண்டை நெருங்கும் நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டிருப்பது எங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் இந்திய மக்களுடனான பார்ட்னர்ஷிப்பிற்கு ஒரு நல்ல சான்றாகும்.

  நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், வென்டார் பார்ட்னர்கள் மற்றும் டீலர் பார்ட்னர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார். இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவினால்தான் மில்லியன் கணக்கான மக்களின் சொந்த கார் வாங்கும் கனவுகளை எங்களால் நனவாக்க முடிந்தது என்றார்.

  தற்போதைய நிலவரப்படி மாருதி சுசூகி இந்தியாவில் சுமார் 16 பயணிகள் வாகன மாடல்களைக் கொண்டுள்ளது. மேற்கண்ட உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்பட்ட கார்கள் உலகளவில் சுமார் 100 நாட்டு மார்கெட்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும் பேசிய ஹிசாஷி, சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் வாகனங்களுக்கான (passenger vehicles) தேவை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப ஹரியானாவின் கார்கோடாவில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணியை நாங்கள் தீவிரப்படுத்தி உள்ளோம்.

  புதிய உற்பத்தி ஆலை ஆண்டுதோறும் அதிகபட்சமாக 10 லட்சம் யூனிட்கள் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். தவிர உற்சாகமான, அம்சங்கள் நிறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல புதிய மாடல் தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Automobile, Maruti