ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரூ.10.45 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

ரூ.10.45 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

Maruti Suzuki Grand Vitara | டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் புக்கிங் கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து சுமார் 57,000-க்கும் மேற்பட்ட புக்கிங்ஸ்களை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாருதி சுசுகி நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 6 மாடல்கள் மற்றும் 9 கலர் ஆப்ஷன்களில் வரும் மாருதி சுசுகியின் மிட்-சைஸ் எஸ்யூவி-யான கிராண்ட் விட்டாராவுக்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. 

டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் புக்கிங் கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து சுமார் 57,000-க்கும் மேற்பட்ட புக்கிங்ஸ்களை பெற்றுள்ளது. கிராண்ட் விட்டாரா வேரியன்ட்களின் விலைகள் ரூ.10.45 லட்சத்தில் தொடங்கி ரூ.19.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது தனது ஆல்-நியூ கிராண்ட் விட்டாராவை ரூ.10.45 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ள மாருதி சுசுகி, டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலையை ரூ.19.65 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

இதில் கிராண்ட் விட்டாராவின் கே-சீரிஸ் ஸ்மார்ட் ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலை ரூ 10.45 லட்சம் முதல் ரூ.17.05 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்டெலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் வேரியன்ட்களின் விலை ரூ.17.99 லட்சம் முதல் ரூ.19.65 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை புது டெல்லி, எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

வெயிட்டிங் பீரியட்:

கிராண்ட் விட்டாரா காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் தங்கள் புதிய காரை பெறுவார்கள் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

மைலேஜ்..

எரிபொருள் செயல்திறனைப் பொறுத்த வரையில், e-CVT உடன் கூடிய இன்டெலிஜென்ட் ஹைப்ரிட் வேரியன்ட் 27.97kmpl மைலேஜை வழங்குவதாக கூறப்படுகிறது. 1.5-லிட்டர் கே-சீரிஸ் 5-ஸ்பீடு MT உடன் 21.11kmpl மைலேஜ் வழங்கும் என்றும், 6-ஸ்பீடு AT உடன் 20.58kmpl மைலேஜ் வழங்கும் என்றும், ஆல் கிரிப் மற்றும் 5-ஸ்பீடு MT காம்பினேஷன் 19.38kmpl மைலேஜை வழங்கும் என்றும் மாருதி சுசுகி கூறி இருக்கிறது.

இன்டீரியர் மற்றும் அம்சங்கள்:

இன்டீரியரில் கிராண்ட் விட்டாரா Toyota-வின் Hyryder-ஐ போலவே தோற்றமளிக்கிறது, கலர் ஸ்கீம்களில் மட்டுமே முக்கிய வேறுபாடு காணப்படுகிறது. இரண்டும் ஒரே ஸ்டீயரிங் வீலை பெறுகின்றன. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் அனைத்து சுவிட்ச் கியர்களும் இரண்டு எஸ்யூவி-களிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அம்சங்களைப் பொறுத்தவரை கிராண்ட் விட்டாராவின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்ஸ், கனெக்டட் கார் டெக்னலாஜி, ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பலவற்றை பெறுகின்றன.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

எஞ்சின் / டிரான்ஸ்மிஷன்:

இது இரண்டு வெவ்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது, 1.5-லிட்டர் இன்டெலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைப்ரிட் மற்றும் 1.5-லிட்டர் கே-சீரிஸ் டூயல் ஜெட் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் VVT. கிராண்ட் விட்டாரா ப்ரோக்ரெசிவ் ஸ்மார்ட் ஹைப்ரிட் என்பது சுசுகியின் கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட் டூயல் விவிடி எஞ்சின் ஆகும். இது 101.6 ஹெச்பி பவர் மற்றும் 136.8 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் விட்டாரா இன்டெலிஜென்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் என்பது 1.5-லிட்டர் மூன்று சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின் ஆகும். இது 91 ஹெச்பி பவர் மற்றும் 122 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.

வேரியன்ட்கள்...

கிராண்ட் விட்டாரா ஸ்ட்ராங் அல்லது மைல்ட் ஹைபிரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மைல்ட்-ஹைப்ரிட் பேட்ஜின் கீழ் இந்த SUV காரானது Sigma, Delta, Zeta மற்றும் Alpha உள்ளிட்ட 4 வேரியன்ட்களில் வருகிறது. ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பேட்ஜின் கீழ் Zeta+ மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் Alpha+ ஆகிய 2 வேரியன்ட்களில் வருகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki