இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிநிறுத்தத்தை (maintenance shutdown) மேலும் நீட்டிப்பதாக கூறியுள்ளது. கோவிட் -19 தொற்றை மேற்கோள்காட்டி மே 9 முதல் மே 16-ம் தேதி வரை பராமரிப்பு பணிநிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறி உள்ளது, நாட்டில் கோவிட்-19 வழக்குகள் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் பராமரிப்பு பணிநிறுத்தத்தை நீடிக்கும் இந்த முடிவை மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "தற்போதைய தொற்று நோய் பரவலை கருத்தில் கொண்டு முன்னதாக 2021 மே 9-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பராமரிப்பு பணிநிறுத்தம் தற்போது மே 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஹரியானாவில் அமைந்துள்ள தங்கள் நிறுவனத்தின் குருகிராம் மற்றும் மானேசர் ஆலைகளில் சில பணிகள் தொடரும் என்று மாருதி சுசுகி இந்தியா கூறியுள்ளது.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தேவையை சமாளிக்க நாட்டிலுள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற்று மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்களும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வழக்கமாக ஆலை பராமரிப்புக்காக ஜூன் மாதத்தில் திட்டமிடப்படும் பராமரிப்பு பணிநிறுத்தத்தை மே 1 முதல் மே 9 வரை முன்னெடுப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறியிருந்தது. இந்த காலக்கட்டத்தில், ஆலையில் கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் உற்பத்தியும் நடைபெறும் என தகவல் வெளியானது.
Also read... ஹூண்டாய் ஐ20 காரின் விலை உயர்வு - புதிய விலை பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள்!
இந்நிலையில் மாருதி சுசுகி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கானதா அல்லது குறைந்த உற்பத்தி தேவை காரணமா அல்லது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவா என்பது உடனடியாக தெரியவில்லை. கடந்த மாதம் வாகன விற்பனையில் சரிவடைந்த போதும் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக மாருதி சுசுகி நிறுவனம் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் அதிகம் விற்பனையான பத்து கார்களில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள் இடம்பெற்று இருந்தன. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் சமீபத்தில் மாருதி சுசுகி இந்தியா ஏப்ரல் 2021ல் மொத்தம் 159,691 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த மாதத்தில் மொத்த விற்பனையில் 137,151 யூனிட்டுகளின் உள்நாட்டு விற்பனை, மற்ற OEM களுக்கு 5,303 யூனிட்டுகள் மற்றும் 17,237 யூனிட் ஏற்றுமதி ஆகியவை அடங்கும். நிதியாண்டை பொறுத்தவரை, முந்தைய நிதியாண்டில் விற்கப்பட்ட 1,563,297 யூனிட்டுகளிலிருந்து 1,457,861 யூனிட்களாக விற்பனையில் 6.7% சரிவை கண்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maruti Suzuki