டீசல் ரக எர்டிகா காருக்கு ‘குட்பை’ சொன்ன மாருதி சுசூகி..!

டீசல் ரகக் கார்களை நிறுத்தும் முடிவைக் கையில் எடுத்திருப்பதால் 2020 பிப்ரவர் மாதம் புதிய வித்தாரா ப்ரெஸ்ஸா காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்ய உள்ளது.

Web Desk | news18
Updated: August 14, 2019, 8:37 PM IST
டீசல் ரக எர்டிகா காருக்கு ‘குட்பை’ சொன்ன மாருதி சுசூகி..!
மாருதி சுசூகி எர்டிகா
Web Desk | news18
Updated: August 14, 2019, 8:37 PM IST
மாருதி சுசூகி நிறுவனம் தனது 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட எர்டிகா ரக காரின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

பாரத் ஸ்டேஜ் VI என்னும் விதிமுறை ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து எர்டிகா காரின் 1.3 டீசல் என்ஜின் கார் உற்பத்தியும் விற்பனையும் நிறுத்தப்பட உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 1.3 லிட்டர் என்ஜின் ரகங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கின.

இனிமேல் எர்டிகா கார் வரிசையில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ரகம் மட்டுமே விற்பனையில் இருக்கும். இதன் மூலம் 105bhp மற்றும் 138Nm டார்க் வெளியீடு இருக்கும். இந்த 1.5 லிட்டர் என்ஜின் ரகம் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.


டீசல் ரகக் கார்களை நிறுத்தும் முடிவைக் கையில் எடுத்திருப்பதால் 2020 பிப்ரவர் மாதம் புதிய வித்தாரா ப்ரெஸ்ஸா காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்ய உள்ளது. புதிய வித்தாரா ப்ரெஸ்ஸா 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: மாருதி சுசூகி கார்களுக்கு ₹70ஆயிரம் வரையில் தள்ளுபடி..!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...