Home /News /automobile /

அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்த மாருதி சுசுகி எர்டிகா..

அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்த மாருதி சுசுகி எர்டிகா..

 மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகி எர்டிகா

Maruti Suzuki Ertiga | இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இரண்டாவது இடத்தை புதிய மாருதி சுசுகி எர்டிகா பிடித்துள்ளது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இரண்டாவது இடத்தை புதிய மாருதி சுசுகி எர்டிகா பிடித்துள்ளது. மாருதி சுசுகி எர்டிகா காரானது நீண்ட காலமாக சிறப்பாக விற்பனையாகி வரும் MPV-ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.

    பணம் கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலவழித்த பணத்திற்கு ஏற்ப சரியான செயல்திறனை வழங்குவதில் மாருதி சுசுகியின் எர்டிகா சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. நாட்டின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி சமீபத்தில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட டிசைன், அம்சங்கள் மற்றும் பேடல் ஷிஃப்டர்கள் கொண்ட 6-ஸ்பீடு ஏடி கியர்பாக்ஸ் கொண்ட கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய எர்டிகாவை அறிமுகப்படுத்தியது.

    ஏப்ரல் 2022-ல் நாட்டில் அதிகம் விற்பனையான இரண்டாவது காராக புதிய எர்டிகா இருக்கின்ற நிலையில், முதலிடத்தை மாருதி சுசுகியின் வேகன் ஆர் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 18,656 யூனிட் வேகன்ஆர் கார்களை விற்ற நிறுவனம், இந்த ஆண்டு ஏப்ரலில் 17,766 யூனிட்களை விற்றுள்ளது. ஏப்ரல் 2022-ல் விற்பனையில் 5% சரிவை சந்தித்தாலும், மாருதி சுசுகியின் வேகன்ஆர் நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் மாடலாக தொடர்கிறது.

    இந்நிலையில் தான் இந்நிறுவனத்தின் எர்டிகா மாடல் தற்போது நாட்டில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது காராக இருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2021 ஏப்ரலில் 8,644 யூனிட் எர்டிகா மாடலை மட்டுமே விற்ற மாருதி சுசுகி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் எர்டிகாவின் 14,889 யூனிட்களை விற்று 72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி உள்ளது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டதே விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஏனென்றால் மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி எர்டிகா தான் இப்போது அதிகம் விற்பனையாகும் கார்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே போல முதல் டாப் 10 லிஸ்ட்டில் உள்ள பெரும்பாலான ஹேட்ச்பேக்குகள் மற்றும் எஸ்யூவி-க்களை புதிய எர்டிகா விஞ்சி உள்ளது. தவிர ஒரு MPV வாகனம் டாப் 3 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை.

    ALSO READ | இந்தியாவில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் KTM-ன் Chicago Disc 271 சைக்கிள்.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்
     2022 எர்டிகாவின் விலை ரூ.8.35 லட்சத்தில் இருந்து ரூ.12.79 லட்சம் வரை கிடைக்கிறது. மேலும் இந்த மாடல் VXi, ZXi மற்றும் Tour M உள்ளிட்ட வேரியன்ட்களில் கிடைக்கிறது. புதிய மாருதி சுசுகி எர்டிகா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டமுடன் வருகிறது.


    புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் டெக்னலாஜியுடன் வருகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 103 ஹார்ஸ்பவர் மற்றும் 136.8 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. பெட்ரோல் வெர்ஷனின் மைலேஜ் லிட்டருக்கு 20.51 கிமீ , அதே சமயம் சிஎன்ஜி வெர்ஷனின் மைலேஜ் 26.11 கிமீ ஆகும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Automobile, Maruti, Maruti Suzuki

    அடுத்த செய்தி