இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் (maruti Suzuki Ertiga facelift) கார் ரூ.8.35 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 மாருதி சுசுகி எர்டிகா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் வருகிறது.
இந்த காரின் டாப்-ஸ்பெக் வேரியன்டின் விலை ரூ.12.79 லட்சம் வரை உள்ளது. புதிய 2022 மாருதி சுசுகி எர்டிகா வேரியன்ட்கள் வாரியாக எக்ஸ்-ஷோரூம் விலைகளை கீழே பார்க்கலாம்..
மாருதி எர்டிகா LXi: ரூ.8.35 லட்சம்
மாருதி எர்டிகா VXi: ரூ.9.49 லட்சம்
மாருதி எர்டிகா VXi CNG: ரூ.10.44 லட்சம்
மாருதி எர்டிகா VXi AT: ரூ.10.99 லட்சம்
மாருதி எர்டிகா ZXi: ரூ.10.59 லட்சம்
மாருதி எர்டிகா ZXi CNG: ரூ.11.54 லட்சம்
மாருதி எர்டிகா ZXi AT: ரூ.12.09 லட்சம்
மாருதி எர்டிகா ZXi+: ரூ.11.29 லட்சம்
மாருதி எர்டிகா ZXi+ AT: ரூ.12.79 லட்சம்
மாருதி எர்டிகாTour M: ரூ.9.46 லட்சம்
மாருதி எர்டிகா Tour M CNG: ரூ.10.41 லட்சம்
புதிய மாருதி சுசுகி எர்டிகா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டமுடன் வருகிறது. புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் டெக்னலாஜியுடன் வருகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 103 ஹார்ஸ்பவர் மற்றும் 136.8 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது.
மாருதி சுசுகியின் கூற்றுப்படி, இந்த கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் லிட்டருக்கு 20.30 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த எஞ்சின் சிஎன்ஜி ஆப்ஷனுடன் வருகிறது. சிஎன்ஜியில் இயங்கும் போது 87 ஹெச்பி மற்றும் 121.5 என்எம் டார்க்கும், பெட்ரோலில் இயங்கும் போது 100 ஹெச்பி மற்றும் 136 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது.
Also Read : ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமா? புதிய விலை பட்டியல் இதோ!
டிசைன் அப்டேட்ஸை பொறுத்தவரை, இந்த காரில் அப்டேட்டட் ஃப்ரன்ட் கிரில், சைட்களில் புதிய டூயல்-டோன் அலாய் வீல்ஸ் மற்றும் boot lid-ல் ஒரு க்ரோம் எலிமென்ட் உள்ளன. காரின் இன்டீரியரில் டூயல்-டோன் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டேஷில் ஃபாக்ஸ்-வுட் டிசைன் எலிமென்ட் (faux-wood design element) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
Also Read : இந்தியாவில் 24 நகரங்களில் இனி இ-பஸ் சேவை!
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (வயர்டு) சப்போர்ட் 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கலி ஆப்ரேட்டட் அவுட்சைட் ரியர்வியூ மிரர்ஸ் போன்ற அம்சங்கள் இதிலும் உள்ளன. மாருதி எர்டிகா 2022 மாடலுக்கான முன்பதிவு ரூ.11,000 என்ற விலையில் சில நாட்களுக்கு முன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.