Home /News /automobile /

மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட XL6 கார்களின் அறிமுகம் எப்போது?

மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட XL6 கார்களின் அறிமுகம் எப்போது?

காட்சி படம்

காட்சி படம்

Maruti Suzuki Facelifted Ertiga, XL6 Cars | மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6 காரின் முன்பக்க கிரில் மற்றும் பம்பரில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல எம்பிவி கார் மாடல்களான Ertiga மற்றும் XL 6 ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய சந்தையில் பலேனோ (Baleno) மற்றும் டிசையர் சிஎன்ஜி (Dzire CNG) ஆகிய கார்களின் வெற்றிகரமான விற்பனையை தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக இரண்டு எம்பிவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதத்தின் மத்தியில் ஃபேஸ்லிஃப்ட் எர்டிகா, எக்ஸ்எல் 6 ஆகிய இரண்டு புதிய மாடல் எம்பிவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி XL 6 காரின் முன்பக்க கிரில் மற்றும் பம்பரில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உட்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 என இரண்டு எம்பிவி மாடல் கார்களிலும் காஸ்மெட்டிக்கில் மாற்றங்களைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு எம்பிவி-க்களிலும் 103 பிஎச்பி மற்றும் 138 எம்.என். உற்பத்தி திறன் கொண்ட1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், அது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும் என்றும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.



இது, இந்திய சந்தையில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்எல் 6 மாருதி எர்டிகா காரின் ஆறு இருக்கைகள் கொண்ட பிரீமியம் பதிப்பாக வெளியாக உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 எம்பிவி கார்களின் வெளிப்புறத்தில் புதிய LED ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அப்டேட்களையும் வெளியிடவில்லை.

also read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

மாருதி எக்ஸ்எல் 6 காரில், புதிய இருக்கை அமைப்பு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீரியோ சிஸ்டம் , ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர்கான் கண்ட்ரோல்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் எழுந்துள்ளது.



also read : ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி இந்த ஆண்டில் அறிமுகம் - விவரக்குறிப்புகள்!

சமீபத்தில் கியா நிறுவனம் தனது எம்பிவி மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, அதற்கு யூஸர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள அதிரடி முடிவெடுத்த மாருதி சுஸுகி நிறுவனம் பிரபல எம்பிவி கார் மாடல்களான எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இம்மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் எர்டிகா இம்மாத மத்தியிலும், XL6 மாத கடைசியிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்னதாகவே, கார் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கசக்கமாக அதிகரித்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Car, Maruti Suzuki

அடுத்த செய்தி