மாருதி சுசுகி இந்தியா லிமிட்டட் நிறுவனம் S-CNG தொழில்நுட்பத்துடன் Dzire-ஐ (Maruti Suzuki Dzire S-CNG) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய Dzire CNG வாகனமானது கே-சீரிஸ் டூயல்ஜெட், டூயல்-விவிடி 1.2-லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது CNG மோடில் 76hp-ஐ வெளியிடுகிறது, அதே நேரத்தில் சாதாரண பெட்ரோல் மோடில் இது 89hp என்ற அளவில் உள்ளது.
ஆனால் டார்க் விகிதங்கள் சற்று வேறுபட்டவையாக இருக்கின்றன. CNG மோடில் 98.5Nm-ஆகவும், பெட்ரோல் மோடில் 113Nm-ஆகவும் உள்ளன. Dzire S-CNG காரானது 31.12 km/kg மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. Maruti Suzuki S-CNG ரேஞ்ச் வாகனங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் கருத்தாக்கம் செய்யப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, ஃபேக்ட்ரி-ஃபிட்டட் செய்யப்பட்டவை. மாருதி சுசுகி டிசையர் குறிப்பாக இந்தியாவில் 22 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
மாருதி சுசுகி டிசையர் S-CNG காரானது VXI மற்றும் ZXI ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. VXI வேரியன்ட் ரூ.8.14 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ZXI வேரியன்ட்ரூ.8.82 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. மாருதி சுசுகி எஸ்-சிஎன்ஜி வாகனங்கள் டூயல் இன்டர்டிபென்டன்ட் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்ஸ் (ECU) மற்றும் ஏர்-ஃப்யூயல் விகிதத்தை வழங்க ஒரு இன்டலிஜென்ட் இன்ஜக்ஷன் சிஸ்டமுடன் வருகின்றன. இது நல்ல சேமிப்புடன் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது.
Also Read : ஒரே நாளில் 1,000 கார்களை சார்ஜ் செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய இவி சார்ஜிங் ஸ்டேஷன்!
மாருதி சுசுகி இந்தியா லிமிட்டட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & சேல்ஸ் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா பேசுகையில் "உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது, மாருதி சுசுகி தொடர்ந்து பசுமை வாகனங்களின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. S-CNG போன்ற நல்ல தொழில்நுட்பத்துடன், அதிக வாடிக்கையாளர்கள் தங்கள் மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்ய S-CNG வாகனங்களுக்கு மாற ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தற்போது லோ ரன்னிங் காஸ்ட் மற்றும் S-CNG வாகனங்களின் அதிக எரிபொருள் திறன் ஆகியவற்றுடன் எங்களிடம் 9 க்ரீன் S-CNG வாகனங்கள் அடங்கிய மிகப்பெரிய போர்ட்ஃபோலியோ உள்ளது என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் எங்களது S-CNG விற்பனை 19% அதிகரிப்பை கண்டுள்ளது. எனவே இவற்றின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சுற்றுச்சூழல் நட்பு, ஃபேக்ட்ரி- ஃபிட்டட் செய்யப்பட்ட மற்றும் பாதுகாப்பான மாருதி சுசுகி S-CNG வாகனங்களை அதிகளவில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி என்றும் குறிப்பிட்டார்.
புதிய Dzire S-CNG காரின் அறிமுகம், பசுமை இயக்கம் பற்றிய நமது பார்வையை மேலும் வலுப்படுத்தும், நாட்டில் பசுமை வாகனங்களை மக்கள் மேலும் ஏற்று கொள்வதை ஊக்குவிக்கும். தவிர வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவின் விருப்பமான செடானில் CNG ஆப்ஷனை பெறுவதால், Dzire S-CNG அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளின் கவலைகளை மேலும் குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நட்பு இயக்கத்தை வழங்கும் என்றும் கூறி உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.