இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி கார் முதலிடம்..!

அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களால் சமீபத்தில் 2 மில்லியன் டிசைர் கார்கள் விற்பனையாது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி கார் முதலிடம்..!
மாருதி சுசூகி டிசைர்
  • News18
  • Last Updated: December 24, 2019, 4:41 PM IST
  • Share this:
இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களுள் மாருதி சுசூகியின் டிசைர் காருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

2019-20 நிதியாண்டில் எட்டு மாதங்களுள் மாருதி சுசூயின் டிசைர் கார்கள் மட்டும் 1.2 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களால் சமீபத்தில் 2 மில்லியன் டிசைர் கார்கள் விற்பனையாது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாருதி சுசூகி விற்பனைப் பிரிவு இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில், “காம்பேக்ட் செடான் ரகங்களில் டிசைர் காருக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். முதன்முறை கார் வாங்குவோரின் தேர்வாக டிசைர் உள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் விற்பனைச் சாதனைக்கு உதவிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டார்.


மாருதி சுசூகி டிசைர்-ன் மூன்றாம் தலைமுறை மாடலை கடந்த 2017 மே மாதத்தில்தான் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. வடிவமைப்பு, உட்புற சொகுசு அமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே இச்சாதனையை டிசைர் பெற்றுள்ளது.

மேலும் பார்க்க: 70 ஆண்டுகளில் 400 மில்லியன் வாகனங்கள் விற்பனை... பிரம்மாண்ட சாதனை படைத்த ஹோண்டா!
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading