35 ஆண்டு கால உழைப்புக்குப் பின் விடைபெறுகிறது மாருதி ஆம்னி!

(Image: Maruti Suzuki)

சில நாள்களுக்கு முன்னர் தான் மாருது சுசூகி இந்தியா நிறுவனம், Eeco என்ற எம்.பி.வி ரக காரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் அசிஸ்டெண்ட், கூடுதல் சீட் பெல்ட் போன்ற அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் முன்னணி எம்.பி.வி ரக காராக இருந்த மாருதி ஆம்னி தற்போது ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி கார் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி தன்னுடைய முதல் காரான மாருதி 800-ன் வெற்றிக்குப் பிறகு 1984-ம் ஆண்டு மாருதி ஆம்னி காரை அறிமுகம் செய்தது. 35 ஆண்டு கால உழைப்புக்கு விடை கொடுக்கும் வகையில் ஆம்னி இனி உற்பத்தியில் இருக்காது.

இதுநாள் வரையிலும் ஆம்னியின் விற்பனை சிறப்பாகவே உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனாலும், இந்திய சாலைகள் கட்டமைப்பு, பாதுகாப்பான பயணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆம்னி நிறுத்தப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்னர் தான் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், Eeco என்ற எம்.பி.வி ரக காரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் அசிஸ்டெண்ட், கூடுதல் சீட் பெல்ட் போன்ற அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ், ஏர் பெக் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த அப்டேட்களை செய்ய முடியாததால் பழைய கார்களின் உற்பத்தியையும் விற்பனையையும் பல கார் நிறுவனங்கள் நிறுத்துகின்றன.

மேலும் பார்க்க: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Rahini M
First published: