’மாத்தியோசி’ டொயோட்டா - மாருதி சுசூகி கூட்டணி... உருவாகிறது செல்ப் சார்ஜிங் EV கார்கள்!

சுசூகி

இந்தியாவிலும் எலக்டிரிக் கார்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு கனிசமான அளவில் உயர்ந்து வருகிறது. டாட்டா, ஹூண்டாய், மஹிந்திரா நிறுவனங்கள் எலக்டிரிக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்துவதுடன், அந்தக் கார்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

  • Share this:
காலநிலை மற்றும் பசுமை இல்ல எரிவாயுக்களின் பிரச்சனையால் காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. உலகளாவிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்லா உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் மின்னல் வேகத்தில் எலக்டிரிக் கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் எலக்டிரிக் கார்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு கனிசமான அளவில் உயர்ந்து வருகிறது. டாட்டா, ஹூண்டாய், மஹிந்திரா நிறுவனங்கள் எலக்டிரிக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்துவதுடன், அந்தக் கார்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், டொயோட்டா - மாருதி சுசூகி நிறுவனங்கள், வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளன. அதாவது, இந்தியாவில் தற்போது எலக்டிரிக் கார்கள் சாலையில் செல்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல் இருக்கின்றன. இது எலக்டிரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையாக இருப்பதால், இதனை மாற்றும் விதமான உயர் தொழில்நுட்பத்தில் தானே சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் எலக்டிரிக் கார்களை டொயோட்டாவும், மாருதி சுசூகி நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாருதி சுசூகி நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் இயக்குநர் ராகுல் பாரதி பேசும்போது, இந்தியாவில் எல்டிரிக் கார்கள் சார்ஜ் செய்துகொள்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாததால், தானே சார்ஜ் செய்து கொள்ளும் செல்ப் சார்ஜிங் எலக்டிரிக் கார்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பாக யூசர்களின் கருத்துகளைக் கேட்டு, அடுத்தடுத்த மாற்றங்களை செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் அடிப்படை கட்டமைப்புகள் நாடு முழுவதும் வருவதற்கு நீண்டகாலமாகும் எனத் தெரிவித்தார். அதுவரை செல்ப் சார்ஜிங் கார்களுக்கு அதிக வாய்ப்பு சந்தையில் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்தக் கார்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கார்களில் இருக்கும் என்ஜின்கள் இன்டெர்னல் கம்யூசன் என்ஜின்களாக (ICE) இருக்கும். அவை சக்கரத்தின் சுழற்சியில் இருந்து பேட்டரிக்கு தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொடுக்கும். இந்த தொழில்நுட்பம் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு சந்தையில் இருக்கும் என்றும் ராகுல் பாரதி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் டொயோட்டாவுடன் இணைந்து ஹைபிரிட் எலக்டிரிக் கார்களை மாருதி சுசூகி நிறுவனம் உருவாக்கியது. அந்தக் கார் 3.8 கிலோவாட் பேட்டரியுடன், 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், செல்ப் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றிருந்தது. அந்தக் கார் லிட்டருக்கு 27 கிலோ மீட்டர் மைல்லேஜ் கொடுத்தது.

Also read... மகேந்திரா முதல் சஃபாரி வரை - ரூ.20 லட்சத்துக்கும் குறைவான TOP 7 சீட்டர் எஸ்.யூ.வி கார்கள்!

மாருதி சுசூகி நிறுவனம் எலக்டிரிக் கார் தயாரிப்பில் தற்போது வரை அதீத ஆர்வம் காட்டவில்லை. இந்த நிறுவனத்தைப்போல் வோல்ஸ்வாகன், ரெனால்ட், நிசான், ஹோண்டா மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்களும் எலக்டிரிக் கார்கள் தயாரிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம், குறைவான உள்கட்டமைப்பு இருப்பதால், இப்போதைக்கு எலக்டிரிக் கார் மார்க்கெட்டுக்குள் அந்த நிறுவனங்கள் நுழைய விரும்பவில்லை. மாருதி சுசூகி நிறுவனத்தைப் பொறுத்த வரை, 2025 ஆம் நிதியாண்டில் எலக்டிரிக் கார் உற்பத்தியில் முழுவீச்சில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் முதல் எலக்டிரிக் காரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: