டிமாண்ட் இல்லாததால் வாகன உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!

மினி ரக வாகனங்கள் என்றழைக்கப்படும் ஆல்டோ, வேகன் ஆர், சிஃப்ட் மற்றும் டிசைர் போன்ற வாகனங்களின் உற்பத்தியே வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

டிமாண்ட் இல்லாததால் வாகன உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 8, 2019, 4:58 PM IST
  • Share this:
தொடர்ந்து ஐந்தாம் மாதமாக டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தியைக் குறைத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மாருதி சுசூகி தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் உற்பத்தி எண்ணிக்கை குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மினி ரக வாகனங்கள் என்றழைக்கப்படும் ஆல்டோ, வேகன் ஆர், சிஃப்ட் மற்றும் டிசைர் போன்ற வாகனங்களின் உற்பத்தியே வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாருதியின் வேன் ரக வாகனங்களின் உற்பத்தியும் கடந்த ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 27.87 சதவிகிதம் குறைந்து 8,501 வாகனங்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மாருதி சுசூகியின் வாகன உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. மாருதி சுசூகி நிறுவனம் மட்டுமல்லாது முன்னணியில் இருக்கும் நிறுவனங்களான மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாகன உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: இன்றைய இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை- ஆய்வு

First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading