விலை உயர்வுக்கு பிறகும் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வரும் மாருதி சுசுகி!

மாருதி சுசுகி

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது விற்பனை 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் உள்நாட்டு சந்தையில் விற்பனை Q3 நிதியாண்டில் 467,369 யூனிட்களாக இருந்தது. இது Q3 FY2020 காலாண்டை விட 13 சதவீதம் அதிகம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, இந்தியா முழுவதும் அதன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் சூழலும் நிலவியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த கார் தயாரிப்பாளருக்கு சுமார் 21,000 யூனிட்டுகள் மட்டுமே இருப்பதாக நம்பப்படுகிறது. மிகக் குறைந்த தொழிற்சாலை சரக்குகளுடன் விற்பனை நடந்து வரும் பட்சத்தில் இது வாடிக்கையாளர்களை நீண்டகால காத்திருப்புக்கு வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வணிகங்கள், தொழில்நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் முடங்கியிருந்த நிலையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆட்டோமொபைல் துறை நல்ல முனேற்றத்தையே கண்டுள்ளது. இந்த நிலையில் மாருதி சுசுகி கடந்த Q3 FY2020-ல் தனது நிறுவனத்தின் விற்பனை விவரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது Q3 FY2019-உடன் ஒப்பிடும்போது, மாருதி சுசுகி வாகனத்தை முதல் முறையாக வாங்குபவர்களின் எண்ணிக்கை  43 சதவீதத்திலிருந்து 48 முதல் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள மாருதி சுசுகி வாடிக்கையாளர்கள் மாற்று காரை வாங்கியதன் பங்கு சரிவைக் கண்டுள்ளது.

இதே காலகட்டத்தில் சுமார் 26 சதவீதமாக இருந்த வாடிக்கையாளர்கள் 19 சதவீதமாக  குறைந்துள்ளனர். நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள மாருதி சுசுகி மாடல்களின் சராசரி வயது முந்தைய 8 ஆண்டுகளில் இருந்து 9.2 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே பழைய வாடிக்கையாளர்கள் மாற்று காரை வாங்கும் வீதம் குறைந்துள்ளதாக கருதுகிறது.  கடந்த ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம், அதன் மாடல்களின் அனைத்து தயாரிப்பு இலாகாவிலும் எக்ஸ்-ஷோரூம் விலையை உயர்த்தியது. 

மாடல்களைப் பொறுத்து, திருத்தப்பட்ட விலைகள் 1-ல் இருந்து 6 சதவிகிதம் வரை இருக்கும். அதாவது சுமார் ரூ.5000 முதல் ரூ. 34000 வரை விலை அதிகரித்திருந்தது.

Also read... செம கூல் டிசைன் மற்றும் பல அம்சங்களுடன் வரப்போகும் நியூ ஜெனரேஷன் "KTM RC 390" மாடல்!

மாருதி சுசுகி இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அதன் 3ம் காலாண்டின் நிதி செயல்திறனில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. Q3 FY2021-ன் நிலவரப்படி நிறுவனத்தி நிகர விற்பனை 13.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் Q3  காலத்தில் அதன் நிகர லாபம் 24.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் Q3-ல் 495,897 வாகனங்களை விற்பனை செய்தது. 

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது விற்பனை 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் உள்நாட்டு சந்தையில் விற்பனை Q3 நிதியாண்டில் 467,369 யூனிட்களாக இருந்தது. இது Q3 FY2020 காலாண்டை விட 13 சதவீதம் அதிகம். மறுபுறம், இந்த காலாண்டில் ஏற்றுமதி 28,528 ஆக இருந்தது. இது Q3FY2020 உடன் ஒப்பிடும்போது 20.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 965,626 வாகனங்கள் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் குறைவு என நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: